சிவாங்கி பிறந்தநாளுக்கு அஸ்வின் எப்படி வாழ்த்து சொன்னார் தெரியுமா??

0
167

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக களமிறங்கிய சிவாங்கி குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியின் மூலமும் நாடறிந்த ஒருவராகப் போற்றப்படுகிறார். அவரது அந்த கள்ளம் கபடமில்லாத மனசு அனைவருக்கும் இப்படி ஒரு தங்கை நமக்கு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என ஏங்கும் அளவிற்கு அவர் உள்ளார்.

 

இன்று 22 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் சிவாங்கிக்கு அனைத்து பிரபலங்களும் தன்னுடைய பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர். இன்றைக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தை திறந்தாலே சிவாங்கி தான் வருகின்றார்.

 

அஸ்வின், கவின், புகழ், சாம், பிரியங்கா, குக் வித் கோமாளி பவித்ரா, தீபா அக்கா, சரத், சக்தி, பாலா, மற்றும் சூப்பர் சிங்கர் போட்டியாளர்கள், என அனைவரும் சிவாங்கிக்கு வாழ்த்து மழை பொழிந்து கொண்டிருக்கிறார்கள்.

 

சிவாங்கிக்கு மிகவும் பிடித்த அஸ்வின் தனது பிறந்த நாள் வாழ்த்தை மிகவும் அழகாக கூறியுள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் சிவாங்கிக்கு போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் “Happiest Birthday Kedi Rowdy CM” என்று கூறியுள்ளார்.

 

மேலும் ” நீ ஒரு சிரிப்பு இயந்திரம் , அனைவர் முகத்திலும் சிரிப்பை வர வர வைத்தர்க்கு நன்றி, இந்த வருடமும் உன்னுடைய power மற்றும் நல்ல பாஸிட்டிவ் தன்மையை நிறைய மக்களுக்கு அள்ளிக்க வேண்டும்” என அவர் அழகாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.