ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அதிகார மட்டத்தில் மாற்றங்கள் நிகழ்வது சகஜம் தான் என்பது அரசியலில் எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது. கடந்த ஆட்சியில் ஊழலில் ஈடுபட்டவர்கள், ஊழலுக்கு துணை போனவர்கள் இதற்கு முந்தைய அரசாங்கத்தால் நெருக்கடிக்கு உள்ளானவர்கள், நெருக்கமானவர்கள் என்று எல்லோரையும் மாற்றி புதிய அரசு உத்தரவிடுவது வழக்கம்தான். புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு நல்ல பசை இருக்கின்ற துறைகளும், பசை இருக்கின்ற துறைகளில் இருந்தவர்கள் உப்புச்சப்பற்ற துறைகளில் அதிகாரிகளாக இடமாற்றம் செய்யப்படுவார்கள்.
இதற்கு தமிழகத்தில் அமர்ந்திருக்கின்ற திமுக ஆட்சியும் விதிவிலக்கு கிடையாது. ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய நான்கு தனி செயலாளர்கள் நியமனம் செய்வதிலேயே அனைவரது பாராட்டையும் பெற்றார். அந்த நான்கு பேருமே மிகவும் திறமையான அதிலும் நேர்மையான அதிகாரிகள் என்று சொல்லப்படுகிறது. அதேபோல அதிகார மட்டத்தில் பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்தினார் ஸ்டாலின். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மிக நெருக்கமாக இருந்த நான்கு தனி செயலாளர்கள் உப்புச்சப்பற்ற துறைக்கு மாற்றப்பட்டார்கள்.
இந்த சூழ்நிலையில் நேற்று 21fஅதிகாரிகளை மாற்றி உத்தரவிடப்பட்டு இருந்தது இன்று எட்டு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். முன்னாள் சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு இருக்கிறார். நோய்த்தொற்று தான் பீலா ராஜேஷ் தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்தியது என்று தெரிவிக்கலாம். அவர் நாள்தோறும் நோய்த்தொற்று நிலவரம் தொடர்பாக தெரிவிக்கும் அவரை காண பெண்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால் அந்தப் பெண்கள் கூட்டம் அவர் தெரிவிக்கும் கருத்துக்களை தெரிந்துகொள்வதற்காக அலைமோதவில்லை அவர் என்ன புடவை கட்டி இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்வதற்காகவே அந்த கூட்டம் கூடியது என்று சொல்கிறார்கள்.
கிட்டத்தட்ட ஒரு மாத காலம் தொடர்ச்சியாக நோய்த்தொற்று நிலவரம் குறித்து பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த பீலா ராஜேஷ் திடீரென ஓரம் கட்டப்பட்டார் அதற்கு காரணமும் தெரியவில்லை. அவருக்கு பதிலாக தற்போது சுகாதாரத் துறைச் செயலாளராக இருக்கும் ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டார். பீலா ராஜேஷ் வணிகவரித் துறை செயலாளராகநியமனம் செய்யப்பட்டார். ஆனால் தற்போது தமிழக அரசு அவரை கைத்தறி மற்றும் துணிநூல் துறை ஆணையராக நியமனம் செய்து உத்தரவிட்டு இருக்கிறது.