வேணும்னா நாங்க எப்படியும் வருவோம்! சொமட்டோ ஊழியர் செய்த டெலிவரி!
கொரோனாவின் இரண்டாம் அலையின் பரவல் காரணமாக முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.ஆனாலும் சிலர் யாரோ என்னமோ யாருக்கோ சொல்கிறார்கள் எங்களுக்கு என்ன? என்ற பாணியில் வெளியில் சுற்றி திரிகின்றனர்.
சில மதுப்ரியர்கள் மற்றும் குடிமகன்கள் என்று அன்பாக அழைக்கப்படும் நபர்களோ அரசு எப்போது டாஸ்மாக் திறக்கும் என்று ஆவலாக காத்துக் கிடக்கிறார்கள்.
ஆனால் சிலரோ அதற்க்கு ஒருபடி மேலே சென்று அவர்களே காய்ச்சி விற்கும் அளவுக்கு போய் கம்பி எண்ணி கொண்டு இருக்கிறார்கள்.
இன்னும் சிலரோ சரக்குக்கு பதில் வேறு எதும் புதிதாக தயாரித்து குடித்து உயிரை மாய்த்து கொள்கின்றனர்.
அந்த வகையில் ஒரு புது வழியை கண்டுபிடித்தாலும் போலீசாரிடம் சிக்கி கொண்டனர்.
சென்னையில் நியூ ஆவடி சாலையில் கே.ஜி.ரோடு சந்திப்பில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த சொமட்டோ ஊழியரிடம் அடையாள அட்டை காட்ட சொல்லி கேட்டுள்ளனர்.அந்த நபரோ முன்னுக்கு பின் முரணாக பேசி உள்ளார்.இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர் கொண்டு வந்த உணவுப்பெட்டியை சோதனை செய்து அதிர்ந்து போயினர்.
அந்த பெட்டியில் மதுபான பாட்டில்கள் இருந்ததை கண்டு அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த நபர் கோடம்பாக்கத்தை சேர்ந்த வெங்கடேச பிரவீன்(32) , என்பதும் சொமட்டோ ஊழியரான இவர், தேவைப்படுவோருக்கு மதுபானம் டோர் டெலிவரி செய்து வந்ததும் தெரிந்தது.அதனை அடுத்து அவர் மீது வழக்குபதிவு செய்தனர்.