கொரோனா உள்ளவர்களுக்கு வரும் கருப்பு பூஞ்சை! உஷார் மக்களே!

0
63
Black fungus that comes to those with corona! Usher people!
Black fungus that comes to those with corona! Usher people!

கொரோனா உள்ளவர்களுக்கு வரும் கருப்பு பூஞ்சை! உஷார் மக்களே!

கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வரும் காலக்கட்டத்தில் அதிலிருந்து மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.இந்நிலையில் அடுத்தடுத்தாக புதிய நோய்கள் பரவி கொண்டு தான் வருகிறது.கொரோனா தொற்றை அடுத்து தற்போது அதிகளவு பரவி வருவது தான் கருப்பு பூஞ்சை.இந்த தொற்றானது பரவி இழப்புகள் ஏற்படும் அபாய நிலைக்கு நாம் தற்போது தள்ளப்பட்டுள்ளோம்.

அந்தவகையில் இந்த தொற்று அதிகளவு சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு வரும் வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர்.ஏனென்றால் அவர்கள் ஸ்டெராய்டு மாத்திரைகள் அதிக அளவு எடுத்துக்கொண்டு சர்க்கரையின் அளவை கவனிக்காமல் இருப்பதால் இந்த தொற்று ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.இந்த தொற்றின் முதல் அறிகுறியே விடாது தலைவலி தான்.இந்த தொற்று வந்தவுடன் வெளிப்படையாக தெரியாது.முதலில் இடைவிடாது தலைவலி ஏற்படும்.

கன்னத்தில் வலை,கண் வலி ஆகியவை மற்றொரு அறிகுறிகள் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.அதனையடுத்து இந்த பூஞ்சையானது இரத்தகுழாய் மூலம் பரவுவதால் இரத்தம் பரவும் அவ்விடத்தில் பாதிப்பு ஏற்பட்டு கருப்பாக உருமாறுகிறது. கொரோனா தொற்று உள்ளவர்கள் குணமாகி சர்க்கரை அளவை கவனிக்காதவர்களுக்கு இத்தொற்று வர வாய்ப்புகள் உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதுமட்டுமின்றி தண்ணீர் மூலமாகவோ அல்லது ஆக்சிஜனை எடுத்துக்கொள்வதன் மூலமாகவோ இந்த கருப்பு பூஞ்சை வர வாய்ப்புகள் இல்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.இதன் மூலமாக பரவுகிறது என்பதற்கு எவ்வித மருத்துவ ஆதாரங்களும் இல்லை எனவும் கூறுகின்றனர்.இந்த கருப்பு பூஞ்சையானது காற்றின் மூலம் பரவுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.இதற்கு போட்டியாக வெள்ளை பூஞ்சை தொற்று உருவாகியுள்ளது.இந்த வெள்ளை பூஞ்சையால் அதிகளவு பாதிப்புகள் இல்லை எனவும் கூறுகின்றனர்.