உங்க புகைப்படங்களை பத்திரமா சேமிச்சு வைங்க!! இனி இந்த செயலிக்கு கட்டணம்!

0
151

நாம் அனைவரும் பயன்படுத்தும் செயல் என்பது கூகுள் போட்டோஸ். அதில் ஏகப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வரம்பற்ற அளவில் சேமித்து கொள்ளலாம். ஆனால் இதற்கு மேல் ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது.

 

கூகுள் போட்டோஸ் வழங்கி வந்த இந்த வரம்பற்ற சேவையானது முடிய போகிறது. இந்த மாதத்திற்கு பின் நீங்கள் சேமித்து வைத்திருக்கும் உயர்தரமான புகைப்படங்கள் 15gb க்குள் இருந்தால் கட்டணம் எதுவும் இல்லை. அதற்கு மேல் சென்றால் கட்டணம் வசூலிக்கப்படும்.

 

ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து 15 ஜிபி – க்கு மட்டுமே போட்டோக்களை சேமித்து வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவர். அதற்கு மேல் சென்றால் கூகுள் ஒன் என்ற சந்தா இணைப்பில் இணைய வேண்டும். கூகுள் ஒன் அடிப்படை சந்தா 100 ஜிபி கொண்டிருக்கும்.

இதற்கு மாதம் ரூ 130 லிருந்து ரூ.1300 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

அதன் பின் அதிகமாக வேண்டுமெனில் 200 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் திட்டமும் உள்ளது. இதற்கு மாதம் ரூ.210 அல்லது ஆண்டுக்கு ரூ.2,100 ஆகும். 2டிபிக்கு மாதத்திற்கு ரூ.650 மற்றும் வருடத்திற்கு ரூ.6,500 கட்டணம். 10டிபிக்கு, மாதத்திற்கு ரூ.3,250 கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

நீங்கள் கூகுள் பிக்சல்(Pixel) பயனாளர்கள் கூகுள் போட்டோஸ் கட்டணம் இல்லை. வரம்பற்ற புகைப்படங்களை சேமித்துக்கொள்ளலாம். அதற்கு கட்டணம் எதுவும் கிடையாது என்று கூகுள் தெரிவித்துள்ளது. கூகுள் போட்டோசுக்கு மாற்றாக டிஜிபாக்ஸ், டீகோ, மைக்ரோசாப்ட் ஒன்ட்ரைவ் உள்ளிட்வை உள்ளன. இதற்கும் கட்டணம் இருக்கலாம். ஆனால் கூகுள் விட குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Previous articleகஷ்டப்படும் 3600 நடன கலைஞர்கள்! உதவி கரம் நீட்டிய நடிகர்!
Next articleஇவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் – மத்திய அரசுக்கு சிரஞ்சீவி கோரிக்கை!