இவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் – மத்திய அரசுக்கு சிரஞ்சீவி கோரிக்கை!

0
80

தெலுங்கு திரைப்பட உலகில் மாபெரும் நடிகராக போற்றப்பட்ட மற்றும் ஆந்திராவின் முதல்வராக பதவி வகித்த மறைந்த என்.டி ராமராவுக்கு உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க கோரி மத்திய அரசுக்கு நடிகர் சிரஞ்சீவி கோரிக்கை விடுத்து உள்ளார்.

 

என்.டி.ராமராவின் 98வது பிறந்தநாளை இன்று ஆந்திரா, தெலங்கானாவில் கொண்டாடி வருகிறார்கள். தமிழ்நாட்டில் எம்ஜிஆர் போல ஆந்திராவில் மாபெரும் மக்கள் மனதில் நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.

 

எம்ஜிஆர் போலவே அவரது பாணியை பின்பற்றி ஆந்திராவில் தெலுங்கு தேசம் என்ற கட்சியை உருவாக்கி ஆட்சியை பிடித்தார். 1982 – இல் கட்சியை துவங்கி 1983 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் ஆட்சியை பிடித்தார். அந்த ஆண்டு முதல் முதலாக ஆட்சியை பிடித்து முதல்வர் ஆனார்.

 

மூன்று முறை முதல்வராக இருந்தார். பின் 1996 ஆம் ஆண்டு மறைந்தார். இவ்வளவு பெருமைகளை உள்ளடக்கி இருக்கும் அவருக்கு விருது வழங்கி பெருமைப்படுத்த வேண்டும்.

 

இசைக்கலைஞர் பூபேன் ஹசரிகாவிற்கு மரணத்திற்குப் பின் பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டது போல, என்.டி,ராமாராவுக்கு கொடுக்க வேண்டும். அவருடைய நூறாவது பிறந்தநாள் வரவிருக்கும் நிலையில் அந்த உயரிய விருது பாரத ரத்னா விருது வழங்கி அவரை கவுரவிக்க வேண்டும். அவருக்கு வழங்கப்படும் விருதானது தெலுங்கு மக்களுக்கான கவுரவமாகவும் இருக்கும்” என நடிகர் சிரஞ்சீவி குறிப்பிட்டுள்ளார்.

 

 

author avatar
Kowsalya