நாமக்கல் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

0
112

நாமக்கல் மாவட்டத்தில் ஒரு வாரத்தில் நோய்த்தொற்று இருக்கு 5 ஆயிரத்து 825 பேர் பாதிக்கப்பட்டிருப்பது பொது மக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டத்தில் சென்ற ஒருவாரத்திற்கு முன்னர் நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வந்ததாக தெரிகிறது. ஒருநாள் பாதிப்பு 300 ஆக இருந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில், தற்போது நோய்த்தொற்று பாதிப்புக்கு ஆளாகும் எண்ணிக்கை சற்று அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, ஒரே தினத்தில் நோய்தொற்று பாதிப்பிற்கு 700க்கும் மேற்பட்டோர் ஆளாகியிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 22ஆம் தேதி வரையில் நாமக்கல் மாவட்டத்தில் மொத்தமாக 24 ஆயிரத்து 598 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தார்கள் இந்த நிலையில் நேற்றைய சர்வே படி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்து 423 ஆக உயர்ந்து இருக்கிறது.

இதனையடுத்து ஒரே வாரத்தில் மாவட்டம் முழுவதும் 5825 பேர் இந்த நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் 49 பேர் சிகிச்சை பலனில்லாமல் பலியாகி இருக்கிறார்கள். இதன் காரணமாக, இதுவரையில் நோய் தொற்றிற்கு 234 பேர் பலியாகியிருக்கிறார்கள். இதனை தொடர்ந்து மூச்சுத் திணறல் காய்ச்சல் தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருக்கிறது. அதோடு 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

Previous articleவாகன ஓட்டிகளுக்கு கவலையளிக்கும் பெட்ரோல் டீசல் விலை!
Next articleமுஸ்லிம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட அவல நிலை! பின்னணியின் மர்மம் என்ன?