தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவதற்கு 60 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்திருப்பதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிபிஎஸ்சி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு இருக்கின்ற சூழலில் நாட்டில் இருக்கக்கூடிய பல மாநிலங்களும் மாநில அளவில் நடத்தப்படும் பொது தேர்வை ரத்து செய்து வருகின்றன.
தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மருத்துவ வல்லுநர்கள் கருத்து கேட்பு நடத்தி அதன் அறிக்கையை சமர்ப்பிக்க முதலமைச்சர் ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு உத்தரவு வழங்கியிருக்கிறார்.
அதன் அடிப்படையில், மாணவர்களுக்கு தேர்வு நடத்தலாம் அல்லது ரத்து செய்யலாமா என்பது தொடர்பாக கருத்து கேட்கும் வேலைகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து இன்று மாலை கல்வியாளர்கள் பெற்றோர் நலச் சங்கத்தினர் ஆசிரியர் மற்றும் மாணவர் அமைப்பினர் உள்ளிட்டோரிடம் அமைச்சர் ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிகிறது.
இதற்கிடையில் மாணவர்களின் உயர் கல்வியையும், வேலைவாய்ப்பையும், மனதில் கொண்டு தேர்வு நடத்தப்பட வேண்டும் இணையதளம் மூலமாக தேர்தல் நடத்தப்படலாம். மூன்று மணி நேர தேர்வை 9 மணி நேரமாக குறைத்து அதற்கேற்றவாறு வினாத்தாள்களை தயார் செய்து தேர்வு நடத்தலாம், அதேபோல தேர்வு மையங்களை அதிகரித்து பணிகளை மேற்கொள்ளலாம் என்று பல கல்வியாளர்களும், பெற்றோர்களும் தெரிவித்து வருகிறார்கள்.
இப்படி 60% நபர்கள் பொதுத் தேர்வை நடத்து வதற்கு விருப்பம் தெரிவித்திருப்பதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அதே சமயத்தில் தற்சமயம் கிராமப்புறங்களில் நோய் தொற்று பரவல் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் உடல் நலன் முக்கியம் என்று தெரிவித்து தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சில பெற்றோர்கள் தங்களுடைய கருத்துக்களை முன்வைத்து இருக்கிறார்கள்.