தமிழக அரசு வெளியிட்ட அரசாணை! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

0
119

தமிழக முதலமைச்சராக ஸ்டாலில் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் தேர்தல் வாக்குறுதி அளித்தபடி பெண்கள் நகர்புற தேர்வுகள் இலவசமாக பயணம் செய்து கொள்ள அனுமதி வழங்கினார். அதோடு அனைத்தினமும் பலவிதமான வாழ்வியல் பிரச்சினைகளை சந்தித்து வரும் திருநங்கைகளுக்கும் பேருந்துகளில் இலவசப் பயணம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ச்சியாக எழுந்து வந்தது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பாக பல விதமான திட்டங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. இது குறித்த அறிவிப்பில் பேருந்து போக்குவரத்து ஆரம்பித்ததும் திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலவச பயணம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது என்று தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில், இதற்கான அரசாணையை தமிழக அரசு தற்சமயம் வெளிவந்திருக்கிறது. அதோடு வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டு இருப்பதாக தெரிகிறது. மாற்றுத்திறனாளிகள் நகர சாதாரண கட்டணம் இருக்கின்ற பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்யும்போது அவர்களுடைய தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையைக் காட்ட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

Previous articleஸ்டாலின் நாளை வெளியிட இருக்கும் முக்கிய அறிவிப்பு! பரபரப்பில் தமிழகம்!
Next articleமானின் வயிற்றில் இருந்த. 7 கிலோ எடை கொண்ட பொருள்! அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள்!