உத்திரபிரதேசம் மாநிலத்தில் 150 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணற்றில் 5 வயது குழந்தை விழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீட்பு பணி தீவிரமாக செய்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தரியை என்ற கிராமத்தில் 5 வயது குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது தவறி 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளது. மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது என்று போலீஸ் தரப்பில் இருந்து சொல்லப்படுகிறது.
ஆக்ரா கிராமப்புறத்தில் உள்ள நிபுஹரா காவல் நிலையத்தில்தான் காலை 8.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக பதிவாகியுள்ளது. மீட்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் குழந்தையின் நடமாட்டத்தை கவனித்து வருவதாகவும், குழந்தை அதற்கு பதில் அளிப்பதாகவும் ஸ்டேஷன் அதிகாரி சுரேஷ் பிரசாத் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தகவல் கிடைத்த அடுத்த நிமிடத்தில் இருந்து குழந்தையை மீட்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
குழந்தையின் தந்தை சோட்டெல்லால் தோண்டிய ஆழ்துளை கிணற்றில் தான் குழந்தை விழுந்ததாக நேரில் கண்ட சாட்சி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குழந்தை விழுந்த ஆள்துளை கிணற்றில் ஒரு கயிற்றை விட்டுள்ளோம். அதை அந்த குழந்தை பிடித்துக் கொண்டு நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறது என்று கிராம மக்கள் கூறியுள்ளனர்.
போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் மற்றும் கிராம வாசிகள் குழந்தையை மீட்க போராடி வருகின்றனர்.