முக்கிய ஆலோசனையில் ஈடுபடும் முதலமைச்சர் ஸ்டாலின்! வெளியாக இருக்கும் அறிவிப்பு!

0
129

தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவ தற்சமயம் படிப்படியாக குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு வரையில் ஒரு நாளைக்கு 36 ஆயிரம் என்ற நிலையில் இருந்து தற்சமயம் 13 ஆயிரமாக குறைந்து இருக்கிறது. தமிழக அரசு முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு கிடைத்திருக்கின்ற வெற்றியாக இந்த நோய்த் தொற்று பாதிப்பு குறைப்பு இருக்கிறது. முழு ஊர் அடங்கில் படிப்படியாகத் தளர்வுகளை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து வருகின்றார்.

இருந்தாலும் நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், கோயமுத்தூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் நோய்த்தொற்றின் எண்ணிக்கை குறையவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆகவே அந்த தொகுதிகளைத் தவிர மற்ற 27 மாவட்டங்களில் மட்டும் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இப்படியான சூழ்நிலையில், நாளை முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லிக்கு புறப்படுகிறார் 17ஆம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அவர் ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிகிறது. தமிழ்நாட்டின் தற்போதைய நோய்த்தொற்று நிலை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்துக்கூறி செங்கல்பட்டு நோய் தடுப்பு மருந்து உற்பத்தி போன்ற பல திட்டங்களுக்கு மிக விரைவில் அனுமதி பெறுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

அதற்கென்று தற்சமயம் நோய்த்தொற்றின் நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு அது தொடர்பாக பிரதமரிடம் ஆலோசனை நடத்துவதற்காக நோய் தொற்றின் தற்போதைய நிலையை அறிந்து கொள்வதற்காகவும் மாவட்ட அளவில் முன்னெடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக மாவட்ட ஆட்சியாளர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்படுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த கூட்டம் இன்று காலை 10 மணி அளவில் நடைபெற இருக்கிறது .காணொளி மூலமாக நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்டத்திலும் நோய்த்தொற்றின் நிலை மற்றும் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிய இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.

Previous articleஇந்த ராசிக்கு சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும்! இன்றைய ராசி பலன் 15-06-2021 Today Rasi Palan 15-06-2021
Next articleதமிழக மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி!