தங்க சங்கலிக்கு கிடைத்த வேலை! முதல்வரின் அதிரடி செயல்!
நம் தமிழ்நாட்டில் தற்போது ஆட்சி மாறிய சூழிலிருந்து பலவித நன்மைகளை திமுக செய்து வருகிறது.மக்களை நேரடியா சந்திப்பது,அவர்களது வேண்டுகோள்களை கேட்டு உடனடியாக நிறைவேற்றி தருவது என விறுவென்று களத்தில் இறங்கி தங்களது கடைமைகளை செய்து வருகின்றனர்.அந்தவகையில் மக்கள் பலர் இவர்களது ஆட்சியை போற்றி வருகின்றனர்.தற்போது கொரோனா தொற்று காலத்திலும் பலவித நடவடிக்கைகளை எடுத்து மக்களுக்கு உதவி செய்தும் வருகின்றனர்.
ஆட்சி அமர்த்திய போதே பெண்களின் நலன் கருதி இலவசமாக பேருந்துகளில் செல்வதற்கு கையெழுத்திட்டார்.அதனைத்தொடர்ந்து தற்போது கொரோனா தொற்றிலிருந்து பலஆயிரம் மக்கள் காக்க முதல்வர் மக்களிடம் உதவிகரம் நீட்டினார்.அவ்வாறு உதவிகரம் நீட்டியதில் பல ஆயிரம் கணக்கான மக்கள் உதவி செய்து வந்தனர்.அதனையடுத்து மேட்டூர் அணை நீர் திறப்பிற்கு முதல்வர் ஸ்டாலின் வந்தார்.அவர் வந்தபோது சேலத்தை சேர்ந்த சௌந்தர்யா என்னும் பெண் முதல்வரை சந்தித்து கொரோனா நிவாரண நிதிக்காக தனது தங்க சங்கலியை கழட்டி கொடுத்தார்.அதுமட்டுமின்றி அந்த பெண் முதல்வரிடம் மனு ஒன்றையும் கொடுத்தார்.
அதனையடுத்து அந்த பெண் கொரோனா தொற்று காரணமாக தாயை இழந்தவர் என்பது தெரியவந்தது.அதுமட்டுமின்றி அந்த பெண்ணின் தந்தை ஆவின் பாலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்பதும்,அந்த பெண்ணிற்கு இரு தம்பிகள் உள்ளார்கள் என்பதும் தெரிய வந்தது.அதன்பின் அவரது தந்தையின் ஓய்வுதிய பணம் அக்குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை என்பதும் தெரிய வந்தது.அதனை கருத்தில்கொண்டு தமிழக முதல்வர் அப்பெண்மணிக்கு வேலை ஒன்றை அளித்துள்ளார்.
அப்பெண்மணி செய்தியாளர்களிடம் கூறியதாவது,என்னை கருத்தில் கொண்டு மாண்புமிகு முதல்வர் இவ்வளவு பெரிய உதவி செய்வார் என்பது தெரியாது.அதுமட்டுமின்றி நான் என் தாயை இழந்தது போல வேறு யாருக்கும் அந்நிலை வரக்கூடாது என்பதால் தான் என் தங்க சங்கலியை கொடுத்து உதவினேன் என்றும் கூறினார்.எங்கள் குடும்பம் பெருமளவு அவருக்கு நன்றி கடன் பெற்றுள்ளது.அதுமட்டுமின்றி தனது பணியை நான் சிறப்புடன் செயல்படுவேன் என்றும் கூறினார்.அத்தோடு முதல்வர் செல்போன் மூலம் பேசியதாகவும் தெரிவித்தார்.