கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இளைஞர்கள் இணைந்து தனது நண்பனின் திருமணத்திற்கு அடித்த பேனர் ஒன்றை பார்த்து ஊரே சிரித்து உள்ளது. இதை இணையதளத்தில் மிகவும் பரவலாக கவனத்தை ஈர்த்து வருகிறது.
உலக அளவிலேயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய சீனாவின் ஹூனான் மாகாணத்தில் 2019ஆம் ஆண்டு தொடங்கிய இந்த கொரோனா பாதிப்பு இன்னமும் நம்மை ஆட்டிப் படைத்து தான் வருகிறது. கடுமையான பஞ்சங்களின் நோய்களால் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் கொரோனா ஒரு பெரிய எதிரியாக வளர்கிறது.
ஆனால் நம் தமிழ்நாட்டு இளைஞர்களை கொரோனாவை கலாய்த்து வருகின்றனர். கொரோனாவை பற்றிய மீம்சுகள் தான் சமூக வலைதளங்களில் பரவி சிரிப்பு வருகிறது என்றால், இங்கே இந்த இளைஞர்கள் செய்த காரியம் மிகவும் சிரிக்க வைத்திருக்கிறது. புதுக்கோட்டையில் covid-19 என்ற பெயரில் இளைஞர்கள் துணிக்கடையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் என்ற கிராமத்தில் ராஜ்குமார் மற்றும் பொன்னரசி என்ற தம்பதிகளுக்கு கடந்த 14ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்திற்கு நண்பர்கள் அடுத்த பேனரில் இன்ஜினியருக்கு கோரோணா தோற்று உறுதி என தலைப்பிட்டு மணமகனை தொற்றினால் பாதிக்கப்பட்டவர் என்றும் மணமகளை கொரோனா என்றும் பேனர் அடித்துள்ளனர். .
அதற்கு கீழே நண்பா நீ போராட வேண்டியது கொரோனா உடன் அல்ல.. உனது மனைவி பொண்ணரசியுடன் என்ற எழுத்துக்களில் எழுதியுள்ளனர்.
இது இன்னும் நகைப்புக்குரிய விஷயம் என்னவென்றால் அத்துடன் வாழ்த்தும் நண்பர்களின் பெயர்களுக்கு முன்பு கொரோனா தொடர்புடைய அடைமொழியை வைத்துள்ளனர்.
கீழே பேனர் அடித்த நண்பர்களின் பெயர்கள் ரத்தக்கொதிப்பு ரமேஷ், ஆம்புலன்ஸ் ஆதி, சுடுதண்ணி சுப்பிரமணி, காய்ச்சல் கருப்பன், சனிடைசர் ஸ்ரீராம், நிலவேம்பு சிவா, கோவிட் குமார், பாஸிடிவ் பிரகாஷ், தும்மல் சேகர், கோவாக்ஸிங் சூர்யா, போன்ற பெயர்களை கண்டு அப்பகுதி மக்கள் சிரித்து விட்டுச் செல்கின்றனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலைகளும் இந்த மாதிரியான பேனர்கள் ஒருவித சிரிப்பை தந்து செல்கின்றது.