திமுகவின் முடிவை ஏற்க இயலாது முரண்டு பிடிக்கும் காங்கிரஸ் கட்சி! உடைகிறதா கூட்டணி?

0
178

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேர் முப்பது வருடங்களாக சிறையில் இருந்து வருகிறார்கள். அவர்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழகத்தின் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள். சென்ற முறை இருந்த அதிமுக ஆட்சி காலத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.

இருந்தாலும் குடியரசுத் தலைவர் அந்த தீர்மானம் தொடர்பாக எந்த ஒரு முடிவையும் மேற்கொள்ளவில்லை என்று தெரிகிறது. இந்த சூழலில் 7 பேரின் விடுதலைக்கு காங்கிரஸ் கட்சியினர் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் தலைமை ஏற்றுக் கொண்டாலும் கூட தமிழக காங்கிரஸ் கட்சியினர் இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இப்படியான சூழ்நிலையில், 7 பேர் விடுதலை குறித்து சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தாலும் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனவும், குற்றவாளிகளை குற்றவாளி ஆகவே பார்க்க வேண்டும் எனவும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்திருக்கின்றார்.

கே எஸ் அழகிரியின் இந்த கருத்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் பதிவு பரபரப்பை கிளப்பியிருக்கிறது. கூட்டணி வைத்து தேர்தலில் வெற்றி பெற்று விட்டு தற்போது இந்த கூட்டணியில் விரிசல் ஏற்படும் வகையில் கே எஸ் அழகிரி உரையாற்றியிருக்கிறார் என்பது பல்வேறு தரப்பினரின் கருத்தாக இருந்து வருகிறது.

ஆனால் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்பந்தம் இருப்பதாக தெரிவித்து சுமார் 30 ஆண்டுகளாக முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை சிறையில் அடைத்து வைத்து இருக்கிறார்கள். அது தொடர்பாக ஆராய்ந்து பார்த்தால் அந்த கொலையில் நேரடியாக இவர்கள் யாருமே சம்பந்தப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

என்ன நடக்கிறது, என்ன நடக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ளாமல் கொலையாளிகளுக்கு கொலையாளிகள் என்று தெரியாமலே உதவி புரிந்தவர்களை கைது செய்து சிறையில் 30 ஆண்டுகாலமாக அடைத்து வைத்திருக்கிறார்கள்.ஆனால் இந்த கொலைக்கு மூலகாரணமாக செயல்பட்ட பலர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது அந்த நெரிசலில் சிக்கி இறந்து போனார்கள் என்பது பலரும் அறிந்ததே. அவ்வாறு இருக்க என்ன நடக்கிறது என்று தெரியாமல் அவர்களுக்கு உதவி புரிந்தவர்களை மட்டும் சிறையில் அடைத்து வைத்திருப்பதை எந்த விதத்தில் நியாயம் என்ற வகையிலும் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அதோடு ராஜீவ் காந்தி கொலையாளி விடுதலை தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இருவேறு கருத்துக்கள் நிலவி வருகிறது. டெல்லி அளவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் இதுதொடர்பாக தெரிவிக்கும் கருத்தும், தமிழக அளவில் இருக்கின்ற காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் தெரிவிக்கும் கருத்தும் இருவேறு கருத்துக்களாக இருந்துவருகிறது. ஒருவேளை தமிழக காங்கிரஸ் கட்சியினர் தெரிவிக்கும் கருத்துக்கும், டெல்லி அளவில் இருக்கின்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் சம்மந்தம் இருக்கிறதா ஒருவேளை அவர்கள் இருவருமே டிராமா போடுகிறார்களா என்பது தொடர்பாகவும் பல்வேறு சர்ச்சைகள் எழுகின்றது.

Previous articleபள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட விதிமுறை! இனி ஆன்லைன் வகுப்புகள் இப்படித்தான் நடக்கும்!
Next articleமுதல்வர் செய்த அந்த செயல் சர்வதேச அளவில் குவியும் பாராட்டு! ஆனால்…