பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட விதிமுறை! இனி ஆன்லைன் வகுப்புகள் இப்படித்தான் நடக்கும்!

0
81

கொரோனாவால்  அனைத்தும் ஆன்லைன் மாயமானதால் பல்வேறு பாலியல் குறித்த புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அதனால் பள்ளி கல்வித்துறை அதற்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தும் வகையில் பள்ளி கல்வி கமிஷனர் தலைமையில் விதிமுறைகளை தயாரித்து வெளியிட்டது. இந்த வழிமுறைக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அனைத்து பாடத்திட்டங்களை பின்பற்றப்படும் அனைத்து பள்ளிகளுக்கும் அலுவலகங்களுக்கும் இது பொருந்தும் என்று தெரிவித்துள்ளது.

 

1. அனைத்து பள்ளிகளிலும் மாணவர் பாதுகாப்பு குழு என்று ஒன்று அமைக்கப்படும்.

2. அந்த குழுவில் தலைமை ஆசிரியர் ஆசிரியர் பெற்றோர் கழக உறுப்பினர்கள் இரண்டு பேர் பள்ளி சாரா அலுவலக நபர் ஒருவர் வெளி நபர் ஒருவர் உறுப்பினர்களாக இருப்பர்.

3. பள்ளி மாணவர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க மாநில அளவில் கட்டுப்பாட்டு மையம் தொலைபேசி எண்ணும் இமெயில் வசதி அமைக்கப்படும்.

4. மாணவர் பாதுகாப்பு குழு மாநில கட்டுப்பாட்டுக்கு புகார்களை தெரிவிக்க வேண்டும்.

5. கட்டுப்பாட்டு மையத்திலிருந்து புகாருக்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுக்கப்படும்.

6. மேலும் புகார்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.

7. ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்களும் ஆசிரியர்களும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு கண்ணியமான உடைகள் அணிய வேண்டும்.

8. ஆன்லைன் வகுப்புகளை முழுமையாக பதிவு செய்ய வேண்டும்.

9. பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பெட்டி அமைக்கப்படும்.

10. மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு, மாணவர்களிடம் பெற்ற கருத்துக்களை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும்.

11. புகார்களை பதிவு செய்ய பதிவேடு பராமரிக்கப்படும்.

 

author avatar
Kowsalya