இரு மிகப் பெரிய இயக்குனர்களை கைவசம் வைத்திருக்கும் தயாரிப்பு நிறுவனம்!

0
204

பாலிவுட்டின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான பெண் ஸ்டுடியோஸ் இப்போதைக்கு பாலிவுட் வட்டாரத்தில் மிகப் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை இந்த நிறுவனம்தான் கைவசம் வைத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் அந்த திரைப்படங்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.


முதல் திரைப்படம் ரஞ்சித் இயக்கத்தில் அக்ஷய் குமார், வாணி கபூர், ஹூமா குரேஷி, லாரா தத்தா, நடித்திருக்கும் பெல்பாட்டம் இந்த திரைப்படம் ஜூலை மாதம் 27 ஆம் தேதி வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அடுத்ததாக ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் ,போன்ற பலர் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக தயாராகி வரும் ஆர் ஆர் ஆர் இந்த திரைப்படத்தை இந்தியில் வாங்கி வெளியிட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 13ஆம் தேதி வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.மூன்றாவதாக சஞ்சய் லீலா பன்சாலி, இயக்கத்தில் ஆலியா பட் லீட் ரோலில் நடித்து உருவாகியிருக்கும் கங்குபாய் என்ற திரைப்படம் ஜூலை மாதம் 30ஆம் தேதி வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அக்ஷய ராஜ் ஆனந்த் இயக்கத்தில் ஜான் ஆபிரகாம், ராகுல் ப்ரீத் சிங், ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகி வரும் அட்டாக் என்ற திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. கடைசியாக இயக்குனர் சங்கரின் கைவண்ணத்தில் ரன்வீர் சிங் நடிக்கும் அந்நியன் திரைப்படத்தின் இந்தி ரீமேக் திரைப்படத்தையும் பெண் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயார் செய்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ஒரு முக்கிய தகவல் கிடைத்திருக்கிறது. அதாவது இந்த ஐந்து திரைப்படங்களும் நேரடியாக திரையரங்கில் மட்டுமே வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து வருவதாக சொல்லப்படுகிறது. இணையதளத்தில் வெளியிடுவது எந்த விதத்திலும் சாத்தியமில்லை ஏனென்றால் அனைத்து திரைப்படங்களும் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருப்பதால் திரையரங்கில் வெளியிடுவது மட்டுமே சாத்தியம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Previous articleஆசையாய் சாப்பிட போகும் பொழுது சாப்பாட்டில் கரப்பான் பூச்சி! விஜய் சேதுபதி பட நடிகை புகார்!
Next articleதடுப்பூசி போடவில்லை என்றால் சிறை! வெளியிடப்பட்ட அதிரடி அறிவிப்பு எங்கு தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here