தடுப்பூசி போடவில்லை என்றால் சிறை! வெளியிடப்பட்ட அதிரடி அறிவிப்பு எங்கு தெரியுமா?

0
73

பிலிப்பைன்ஸ் நாட்டில் நோய்த்தொற்று பரவல் காரணமாக, பல நடவடிக்கைகள் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக அந்த நாட்டில் நோய்த்தொற்று பரவல் தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுக்கும் நபர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அந்த நாட்டின் அதிபர் தெரிவித்திருக்கின்றார்.

சமீபத்தில் நோய்த்தொற்று பரவல் காரணமாக, விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறும் விதமாக தேவையில்லாமல் வீதிகளில் சுற்றித் திரிந்த நபர்களை சுட்டுக் கொல்வதற்கு காவல்துறையினருக்கும், ராணுவத்திற்கும், அனுமதி வழங்கி நாட்டு மக்களை அச்சமுற வைத்த பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ அதன் தொடர்ச்சியாக தற்சமயம் நாட்டில் நோய்த்தொற்று பரவல் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மறுப்பு தெரிவிக்கும் நபர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு எல்லோரையும் கதிகலங்க வைத்திருக்கின்றார்.

அந்த நாட்டில் இதுவரையில் 13 லட்சத்து 67 ஆயிரத்து எண்ணூற்று தொண்ணூற்று நான்கு பேருக்கு நோய் தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 23 ஆயிரத்து 809 பேர் இந்த நோயினால் உயிரிழந்திருக்கிறார்கள். அங்கே நோய்த்தொற்று பரவல் இரண்டாவது அலை மிக வேகமாக பரவும் அபாயம் இருக்கின்ற சூழலில் தடுப்பூசி போடும் பணிகளை அரசு மிக தீவிரமாக செயல்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் 11 கோடி மக்கள் தொகை கொண்ட பிலிப்பைன்ஸில் இதுவரையில் 21 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்படியான சூழ்நிலையில்தான் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள மறுப்பு தெரிவித்தால் சிறை தண்டனை என்ற அறிவிப்பை அந்த நாட்டின் அதிபர் ரோட்ரிகோ வெளியிட்டிருக்கின்றார். தொலைக்காட்சி மூலமாக அந்த நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர் என்னை தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள் நாட்டில் ஒரு நெருக்கடி நிலவிவருகிறது. தேசிய அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு இருக்கிறது ஆகவே தடுப்பூசியா அல்லது சிறையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு நீங்கள் தடுப்பூசி போட விரும்பவில்லை என்றால் நான் உங்களை கைது செய்வேன் அதன்பிறகு நானே உங்களுக்கு ஊசி போடுவேன் என்று தெரிவித்திருக்கின்றார்.

நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பவில்லை என்றால் பிலிப்பைன்ஸ் நாட்டை விட்டு வெளியேறுங்கள்.. இந்தியா அல்லது அமெரிக்கா என்று எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் ஆனால் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்தால் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று தெரிவித்திருக்கின்றார்.