திருப்பதி கோயில் நிர்வாகிகளுக்கு வந்த சோதனை! இனி அவர்கள் இல்லை!

0
83

ஆந்திர மாநிலம் திருப்பதி மலையில் உள்ள ஸ்ரீ வெங்கடாஜலபதி கோயிலுக்கு அறங்காவலர் குழு ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. அதன் காலம் முடிவுற்றதால் அந்த அறங்காவலர் குழுவையே மாநில அரசு கலைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடாசலபதி திரு கோவிலை தேவஸ்தான நிர்வாகிகள் தான் நிர்வகித்து வந்தனர். இந்நிலையில் அறங்காவலர் குழு ஒன்று அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு சேவை ஆற்றும் விஷயங்களை செய்து வந்தது. அதற்கு ஓய் வி சுப்பாரெட்டி தலைவராக இருந்தார். மேலும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 36 பேர் அந்த குழுவில் இருந்தனர். கடந்து 2019ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த அறங்காவலர் குழு 2021ல் முடிவடைய உள்ளது.

கொரோனா வைரஸ் அதிகமாக பரவியதால் நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட நிலையில் கோயிலுக்கு பக்தர்கள் வருவதும் தடைசெய்யப்பட்டது. பின் ஓரளவு நிலைமை சீரடைந்து பின்னும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர் பின் இரண்டாவது அலை வந்ததால் ஆன்லைன் மூலம் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

இப்படி தொடர்ந்து போய்க் கொண்டிருந்த நிலையில் கடந்த 21ஆம் தேதியுடன் அறங்காவலர் குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்ததும் இதுதொடர்பாக குழு உறுப்பினர்கள் கூறுகையில் கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகள் முழு அளவில் எங்களால் பக்தர்களை சேவை செய்ய முடியவில்லை அந்த பாக்கியம் எங்களுக்குக் கிடைக்கவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர் இந்த பதவிக்காலம் முடிவுற்றது அடுத்து தேவஸ்தான அறங்காவலர் குழுவையே ஆந்திர மாநிலம் கலைத்தது.

தற்காலிமாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும்வரை ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையிலான நிர்வாக குழு தேவஸ்தான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி ஜவகர் ரெடி நிர்வாக குழு தலைவராகவும், கூடுதல் செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்த தர்மா ரெடி கண்வினராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
.