தனியார் பள்ளிகளில் இனி கல்வி கட்டணம் இவ்வளவு தான்? அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு

0
201
school-fee-reducued-by-government
school-fee-reducued-by-government

தனியார் பள்ளிகளில் இனி கல்வி கட்டணம் இவ்வளவு தான்? அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு

புதுச்சேரி மாநிலத்தில் தனியார் பள்ளிகள் இந்தக் கல்வி ஆண்டிற்கான கல்வி கட்டணத்தில் 75 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என அம்மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த கட்டணத்தை இரண்டு அல்லது மூன்று தவணைகளில் வசூலித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை:

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பானது தீவிரமாக பரவி வரும் சூழலில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு  கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பானது அதி தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து பொதுமக்கள் அனைவரும் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தற்போது அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படவில்லை. வழக்கம்போல பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு நடத்த ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் தனியார் பள்ளிகளால் இந்த ஆண்டிற்கான கல்வி கட்டணம் முழுமையாக வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் வகுப்பாக இருந்தாலும் முழு கல்வி கட்டணத்தை பெரும்பாலான தனியார் பள்ளிகள் வசூலித்து வருகின்றன. இது பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் தான் புதுச்சேரி மாநில அரசு தனியார் பள்ளிகளுக்கு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கல்வி கட்டண சலுகை:

இந்த உத்தரவில் மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிகள் இந்த கல்வி ஆண்டில் (2021 – 2022) கட்டணக் குழு நிர்ணயித்துள்ள தொகையில் 75 சதவீத்தை மட்டுமே கல்வி கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.. இந்த உத்தரவானது சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த 75 சதவீத கல்வி கட்டணத்தை தனியார் பள்ளிகள் இரண்டு அல்லது மூன்று தவணைகளாக வசூலித்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டு விளையாட்டு கட்டணம், பேருந்து கட்டணம், சீருடைகள்,கூடுதல் கட்டணம், நூலக் கட்டணம், ஆய்வகக் கட்டணம் மற்றும் மருத்துவக் கட்டணம் உள்ளிட்டவைகளை வசூலிக்க் கூடாது என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த உத்தரவானது பள்ளிகள் திறந்து மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடைபெறும் வரை அமலில் இருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஇன்றே கடைசி தேதி! 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு 36000 சம்பளத்தில் அண்ணா பல்கலைகழக வேலை
Next articleதடுப்பூசி போட வந்த இடத்தில் நடந்த விபரீதம்! என்ன நடந்தது?