செல்போனினால் பரிதாபமாக இறந்த சிறுவன்! மேலும் 3 சிறுவர்கள் படுகாயம்?

Photo of author

By Kowsalya

செல்போனினால் பரிதாபமாக இறந்த சிறுவன்! மேலும் 3 சிறுவர்கள் படுகாயம்?

Kowsalya

Updated on:

மகாராஷ்டிரா மாநிலத்தில் செல்போன் டவர் கிடைக்க வேண்டும் என்பதற்காக மரத்தில் ஏறிய 15 வயது சிறுவனை மின்னல் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்போன் இப்பொழுது மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவருகிறது இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் மற்ற வகுப்புகளுக்கு செல்போன் மிகவும் ஆதாரமாக விளங்குகிறது. ஆனால் அப்படிப்பட்ட அந்த செல்போன் பலரின் உயிரை பறித்துள்ளது. அதே போலத்தான் இந்த ஒரு சிறுவனின் உயிரையும் பலி வாங்கி மூன்று சிறுவர்களையும் படுகாயம் அடைய செய்துள்ளது.

பால்கார் மாவட்டத்தில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்து கொண்டிருந்த பொழுது அப்பகுதியை சேர்ந்த நான்கு சிறுவர்கள் கால்நடை மேய்த்து வருவதற்காக வயல்வெளிக்கு சென்றுள்ளனர். அப்போது செல்போனில் நெட்வொர்க் எதுவும் கிடைக்காததால், 4 பேரும் மரத்தில் ஏறி செல்போன் நோண்டிக் கொண்டு இருந்த நிலையில் மின்னல் தாக்கியதில் ரவீந்திர கோர்டா என்ற சிறுவன் அங்கேயே உயிரிழந்தார். மீதமுள்ள மூன்று பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.