ட்விட்டர் நிறுவனம் மீது நான்காவது முறையாக இந்திய அரசின் சட்ட பாதுகாப்பை ட்விட்டர் இழந்துள்ள நிலையில் ட்விட்டர் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை ட்விட்டர் ஏற்க மறுத்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசுக்கும் ட்விட்டர் நிறுவனத்திற்கும் இடையே ஆன பிரச்சனை நாளுக்கு நாள் முற்றி வருகிறது என்றே சொல்லலாம். இந்த நிலையில் இந்தியாவின் சட்ட பாதுகாப்பை ஒவ்வொரு நாளும் இழந்துவரும் ட்விட்டர் நிறுவனம் மீதும் அது பதிவேற்றப்படும் சட்டவிரோதமான பதிவுகள் பற்றி தொடர்பான வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
அதன் வரிசையில் இப்பொழுது ட்விட்டர் மீது நான்காவது வழக்கை டெல்லி போலீசார் பதிவு செய்துள்ளனர். ட்விட்டரில் சிறுவர்களின் ஆபாச படங்கள் பதிவிடுவது மற்றும் ஐடி சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், டெல்லி காவல்துறையினர் இடம் அளித்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் பிரிவில் இந்த வழக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.