நடிகர் விஷாலின் மீது இயக்குனர் விஜய் ஆனந்த் திருட்டுப் புகார்!

0
137

நடிகர் விஷாலின் மீது இயக்குனரான விஜய் ஆனந்த், விஷால் டைட்டிலை திருடி உள்ளதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

இது குறித்து விஜய் ஆனந்த் கொடுத்த புகாரில், 15 ஆண்டுகளாக திரையுலகில் உள்ளேன். இணை இயக்குனராக பல படங்களில் பணியாற்றி உள்ளேன். அப்படி சக்ரா படத்தில் விஷாலுடன் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுது காமன்மேன் என்ற கதையை அவரிடம் கூறினேன்.

 

நான் பதிவு செய்த அந்த தலைப்பை விஷால் அபகரிக்க நினைக்கிறார் என்று சொல்லியுள்ளார். நான் டைட்டிலை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள் என்று நான் கூறி இருந்தபொழுது மௌனமாக இருந்துவிட்டு இப்போது நாட் எ காமன்மேன் என்று சப்டைட்டில் அவர் வைத்துள்ளது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார்.

 

இதுபற்றி விஷாலிடம் கேட்டபொழுது அவர் பக்கம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. ஆனால் அவரது நண்பர்கள் மூலமாக மறைமுகமாக என்னை மிரட்டி வருகிறார் என்று சொல்லியுள்ளார். இந்த திரையுலகில் டைட்டில் பஞ்சாயத்துக்கு ஒரு முடிவு கட்டுங்கள் என புகார் அளித்துள்ளார். மேலும் இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் அவர்களிடமும் புகார் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Previous articleகுட்டை டவுசரில் சென்னை வந்த பூஜா ஹெக்டே!
Next articleஇந்த ராசிக்கு கடன் பிரச்சினைகள் தீரும்- 01-07-2021 Today Rasi Palan 01-07-2021