இரண்டு ஆண்டுகளாக கூட்டு பாலியல் பலாத்காரம்! போலீசாரின் மெத்தனம்!
தற்போதெல்லாம் பெண்பிள்ளைகள் இருந்தாலே வீட்டில் பயங்கர கண்டிப்புடன் இருக்கவேண்டிய அபாயகரமான சூழ்நிலையில் இருக்கிறோம். சிறு பிள்ளைகள் பக்கத்தில் இருக்கும் கடைக்குச் செல்ல கூட பெற்றோர் யோசிக்க வேண்டிய சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறோம். ஏனென்றால் நமது சமுதாயம் அப்படி சீரழிந்து இருக்கின்றது. சிறு பிள்ளைகள் கூட தனியாக வெளியே செல்ல முடியாத நிலை வளர்ந்து கொண்டே போகின்றது.
இதற்கு டெக்னாலஜி ஒரு காரணம் என்றாலும் வீட்டில் உள்ளவர்கள் ஆண் பிள்ளைகளுக்கு மனிதாபிமானத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும். இதெல்லாம் தவறு என்றும் கூறி வளர்க்க வேண்டும். ராஜஸ்தான் மாவட்டத்தில், ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயதான மாணவி ஒருவர் கடந்த 2019ஆம் ஆண்டு கல்லூரிக்கு பரீட்சைக்கு செல்லும் போது, இரு நபர்கள் அவரை அந்த ஆழ்வார் பகுதியிலிருந்து கடத்திச் சென்றனர்.
மேலும் அந்தப் பெண் மூன்று நபர்களால் பாலியல் பலாத்காரமும் செய்யப்பட்டார். இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண் மலகேரா போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். ஆனால் போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. ஆனால் அந்த 3 நபர்களும் பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அந்த சம்பவத்தின் வீடியோவை கையில் வைத்துக்கொண்டு நீ சம்மதிக்காவிட்டால் இதை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக அச்சுறுத்தி அந்த பெண்ணை உபயோகப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கௌதம் சைனி என்ற ஒரு நபர், அந்த மூன்று நபர்களில் ஒருவரான இவர் அந்த பெண்ணிடம் தன்னை சந்திக்கும்படி அழுத்தம் கொடுத்துள்ளார்.
அந்த வீடியோவை அந்த மாணவிக்கும் அனுப்பியுள்ளார். மேலும் சமூக ஊடகங்களிலும் வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக அந்தப் பெண் மீண்டும் போலீஸ் சூப்பிரண்ட் தேஜஸ்வினி கௌதமை சந்தித்து புகார் ஒன்றை அளித்துள்ளார். அவர் அந்தப் பெண்ணை ஆல்வார் மாவட்டத்திலுள்ள மலகேரா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க ஏற்பாடு செய்தார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் அந்த போலீஸார் ஜூன் 28ஆம் தேதி அன்று இந்த வழக்கை பதிவு செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியை மருத்துவ பரிசோதனைக்கும் அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து 164 அறிக்கைகளை போலீசார் பதிவும் செய்துள்ளனர். குற்றவாளிகள் 3 பேரையும் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.