சேலத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண் உயிரிழப்பு! ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

0
124

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே தடுப்பூசி போட்டுக் கொண்ட இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் புகார் அளித்த சம்பவம் மாபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஆத்தூரை அடுத்துள்ள அம்மம்பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி சுபலட்சுமி. இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இருவருக்கும் இரட்டை குழந்தைகள் உள்ளன. இரண்டு மாதங்களுக்கு முன்புதான் பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தை பிறந்தது. அதனால் தனது பெற்றோரின் வீட்டில் சுப்புலட்சுமி இருந்து வந்தார் என சொல்லப்படுகிறது.

 

கடந்த மாதம் 19 ஆம் தேதியன்று காட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த செவிலியர் சித்ரா என்பவர் மிகவும் கட்டாயப்படுத்தி தடுப்பூசி போடவேண்டும் என்று அழைத்துச் சென்று தடுப்பூசி போட்டு விட்டதாக கூறப்படுகிறது.

 

இதனால் சுப்புலட்சுமிக்கு மிகவும் உடல்நலம் குன்றி மூச்சு விடுவதற்கு சிரமமாகி கடந்த 23 ஆம் தேதி அன்று உயிரிழந்துள்ளார். இதனால் அந்த செவிலியர் மீது சுப்புலட்சுமியின் கணவர் மூர்த்தி ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

மேலும் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இரட்டை குழந்தைகளுடன் சென்ற மூர்த்தி, தன் மனைவியை தடுப்பூசி போட்டு கொன்றதாக சித்ரா மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் புகார் அளித்துள்ளார். மேலும் தனது இரட்டை குழந்தை களுக்கும் அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

 

 

Previous articleஇந்த ராசிக்கு தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்- 03-07-2021 Today Rasi Palan 03-07-2021
Next articleரூ. 4000 வழங்கும் மத்திய அரசு திட்டத்தில் உங்கள் பெயர் உள்ளதா? எப்படி பார்ப்பது?