சொகுசு கார் எல்லாம் இல்லை! ஆடி மட்டுமே உள்ளது! மதனின் மனைவி பகீர்!
ஆபாச பேச்சு மற்றும் பண மோசடி உள்ளிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பப்ஜி மதன் இன்று அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இரண்டு முறை அவனுடைய ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் யூடியூப் பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்களிடம் யூடியூப் சேனலை தொடங்கி மதன் பப்ஜி கேம் மட்டுமே விளையாடி வந்தார். கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் எந்த சொத்துகளையும் வாங்கவில்லை என்றும், எங்களிடம் இரண்டு சொகுசு கார்கள் இருப்பதாக கூறுகிறார்கள்.
ஆனால் இதெல்லாம் தவறு என் பெயரிலும், அவர் பெயரிலும், சொகுசு கார்கள் இல்லை ஆதாரம் கூட அதற்கு இல்லை. ஆடி ஏ6 கார் மட்டும்தான் மதன் வைத்திருக்கிறார் என்றும் கூறியுள்ளார். நாங்கள் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம். சொந்த வீட்டில் கூட குடியிருக்கவில்லை. தினமும் 20 மணி நேரம் யூடியூப் சேனலில் வேலை பார்த்து வந்தார்.
என் கணவர் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டும் தான் ஓய்வெடுப்பார். பார்வையாளர்கள், சூப்பர் சார்ட்டிங் மூலம் தான் எங்களுக்கு வருமானம் கிடைத்தது. தற்போது யூடியூப் சேனலை முடக்கம் செய்துவிட்டார்கள். என்னுடைய டெபிட் கார்டு வங்கி கணக்கு, வீட்டின் சாவி எல்லாமே போலீசாரிடம் தான் இருக்கிறது. அதனால் எங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
என்னுடைய வங்கி கணக்கை மதன் பயன்படுத்தியதால் தான் இந்த வழக்கில் என்னையும் போலீசார் கைது செய்துள்ளனர். நான் எட்டு மாத கைக்குழந்தையுடன் விசாரணைக்கு வந்து செல்கிறேன் என வருத்தமும் தெரிவித்தார். நான் பப்ஜி கேம் விளையாடியதே இல்லை நான் பேசுவதாக கூறிய தகவல்கள் அனைத்தும் பொய். அது என்னுடைய குரலே அல்ல. நான் ஆன்லைனில் அவருடன் பேசியதே இல்லை.
எங்கள் மீது 200க்கும் மேற்பட்டவர்கள் புகார் கொடுத்ததாக சொல்கிறார்கள். அதற்காகத்தான் நான் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தேன். இங்கு வந்தபோது தான் மதனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்த தகவல் எனக்கு கிடைத்தது. அவர் மீது குண்டாஸ் போட்டார்கள் என்பது கூட எனக்கு தெரியவில்லை. அதை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் நாங்கள் பணம் வாங்கி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அவர்கள் எங்களிடம் பணம் கொடுத்தவர்கள் யாரும் புகார் அளிக்கவில்லை. ஆதாரங்கள் இருந்தால் அதை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.