மாணவனின் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் ரத்து! அதிரடி செய்த முதன்மை கல்வி அலுவலர்!

0
65
Student's SSLC Score Cancel! Principal Education Officer in Action!
Student's SSLC Score Cancel! Principal Education Officer in Action!

மாணவனின் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் ரத்து! அதிரடி செய்த முதன்மை கல்வி அலுவலர்!

பத்தாம் வகுப்பிலேயே இந்த அளவு போலித்தனம் தேவையா? பிள்ளைகள் எவ்வளவு கெட்டு விட்டனர். தேர்ச்சி பெறாமலேயே தேர்ச்சி பெற்றதாக மாற்றிக் கூறி உள்ளான். ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தால் என்ன? மீண்டும் படித்து எழுத வேண்டியதுதான். இல்லையென்றால் நன்றாக படித்து இருக்க வேண்டும்.

இப்பவே இப்படி என்றால் அவன் வளரும் காலத்தில் இன்னும் என்னவெல்லாம் செய்வான். அதற்கு தகுந்த தண்டனை அவனுக்கு வழங்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள எடப்பாடி அரசு பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்த மாணவன் 18 – 19 கல்வி ஆண்டில் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதியுள்ளான். இதில் அவன் ஆங்கில பாடத்தில் தோல்வி அடைந்துள்ளான்.

பின்னர் இணையதளம் மூலம் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து அதில் 31 மதிப்பெண்ணை 35 ஆக மாற்றி வைத்துள்ளான். மேலும் பெயில் என்பதை தேர்ச்சி ஆனதுபோல் பி என மாற்றியுள்ளான். அதேசமயம் சான்றிதழில் மதிப்பெண் எழுத்துக்களால் எழுதப்பட்டு இருந்ததை அவன் மாற்றாமல் விட்டு விட்டன. தொடர்ந்து அதே பள்ளியில் பிளஸ்-1 வகுப்பில் சேர்ந்துள்ளான். அங்கிருந்த ஆசிரியர்கள் அதை சரியாக கவனிக்காமல் மாணவனுக்கு +1 சேர்க்கை வழங்கியுள்ளனர்.

சிறப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதால், அசல் மதிப்பெண் சான்றிதழ் வர காலதாமதமாகும் என மாணவன் தெரிவித்துள்ளான். இதனால் ஆசிரியர்கள் அப்போது பெரிதாக எதுவும் கண்டு கொள்ளவில்லை. மேலும் மாணவனிடம் ஆசிரியர்கள் அடிக்கடி சான்றிதழ் கேட்கும் போதெல்லாம் அந்த மாணவன் ஏதோ ஒரு காரணம் சொல்லி சான்றிதழ் சமர்ப்பிக்காமல் இருந்துள்ளான்.

இந்த நிலையில் தற்போது பிளஸ் டூ மதிப்பெண் கணக்கிட்டு போடுவதால், எஸ்எஸ்எல்சி மதிப்பெண்ணை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட மாணவன் சான்றிதழை சரிபார்த்த போது அதில் அந்த மாணவன் திறுத்தி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆங்கில பாடத்தில் தேர்ச்சி பெறாமல் அவனே  மதிப்பெண் சான்றிதழில் திருத்தி போலி சான்றிதழ் கொடுத்து பிளஸ்-1 சேர்ந்தது தெரியவந்தது.

மேலும் போலி சான்றிதழ் மூலம் பிளஸ்-2 படிப்பில் சேர்ந்த அந்த மாணவனின் எஸ்எஸ்எல்சி வகுப்பு மதிப்பெண் பட்டியல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கல்வி அதிகாரிகள் விசாரணை அறிக்கைக்கு பின்னர் கவனக்குறைவாக இருந்த ஆசிரியர்கள் மீதும், சம்பந்தப்பட்ட மாணவன் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர் .

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எவ்வளவு சம்பளம் தரப்படுகிறது. ஆனாலும் அவர்கள் இவ்விதம் பொறுப்பில்லாமல் இருந்துள்ளனர்.