ரஷ்யாவை சேர்ந்த பயணிகள் விமானம் மாயம்!

0
134
Russian passenger plane magic!
Russian passenger plane magic!

ரஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது கம்சாட்கா தீபகற்பம். இங்குள்ள பெட்ரோபாவ்-கம்சாட்ஸ்கி நகரில் இருந்து பலானா நகருக்கு நேற்று காலை ‘அன்டோனோவ் அன்-26′ ரக பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது.விமானத்தில் 22 பயணிகளும் 6 சிப்பந்திகளும் இருந்தனர்.

இந்த விமானம் பலானா நகரில் உள்ள விமான நிலையத்தை நோக்கிப் பறந்து கொண்டிருக்கும்போது கட்டுப்பாட்டை இழந்து தடுமாறியது .இது தொடர்ந்து கட்டுப்பாட்டு மையத்துடன் ஆன தொடர்பு துண்டானது. ரேடாரில் விமானத்தின் இடம் கண்டறிய முடியாததால் ரஷ்யாவுக்கு சொந்தமான தேடுதல் படை களத்தில் இறங்கியது.

ரஷ்யாவுக்கு சொந்தமான தேடுதல் படைகளுடன் இணைந்து பல்வேறு ட்ரோன்களும், ரஷ்யாவின் விமானப் படையும் மாயமான விமானத்தை தேடிய கிளம்பியது.

பல மணி நேரம் தேடுதலுக்கு பிறகு ,மாயமான விமானத்தின் சில பாகங்கள் கடலிலும், சிலது நிலத்திலும் கிடைத்தது அதனால் விமானம் கடலில் விழுந்ததா? அல்லது நிலத்தில் விழுந்ததா? என்ற கேள்வி எழுந்தது.இந்நிலையில் மாயமான விமானத்தில் பயணித்த 28 நபர்களில் ஒருவற்க்கூட கிடைக்காததால் ரஷ்யா தேடுதலை தீவிரப்படுத்தியுள்ளது.

2014ஆம் வருடமும் இதேபோன்று மலேசியாவிலிருந்து கிளம்பிய பயணிகளில் விமானம் மாயமானது. இன்றுவரை ,அதுகுறித்து எந்த ஒரு தகவல்களோ, தேடுதலில் முன்னேற்றமோ என எதுவும் நடக்கவில்லலை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleமாணவனின் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் ரத்து! அதிரடி செய்த முதன்மை கல்வி அலுவலர்!
Next articleடோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல தயாராகும் தமிழக வீரர்கள்