வீரப்பாண்டி ஆறுமுகம் மரணம் குறித்து பேச பாமகவிற்கு அருகதை கிடையாது! வீரப்பாண்டி ராஜா ஆவேசம்
சேலம் பாமக மாநில துணைச்செயலாளர் அருள் அவர்கள், மு.க.ஸ்டாலின் கொடுத்த மன அழுத்தத்தினாலேயே திமுக சேலம் மாவட்டச்செயலாளர் வீரபாண்டி ஆறுமுகம் இறந்தார், இதுகுறித்து தனிக்குழு அமைத்து உண்மையைக் கண்டறிந்துள்ளோம். இதில் உள்ள உண்மையை மனுவாக முதலமைச்சரிடம் கொடுக்க உள்ளோம் என்று தெரிவித்தார்,
இதற்கு கடும் கண்டனத்தை வீரபாண்டி ராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.
எனது தந்தையின் மரணம் குறித்து பாமகவினர் பேச எவ்வித தகுதியும் கிடையாது என்று சேலம் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜா அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,
எனது தந்தையின் மரணம் குறித்து பேச பாமகவினருக்கு எந்த அருகதையும் இல்லை.
வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்தது கருணாநிதிதான், மேலும் வன்னியர்களுக்கு 15% தருகிறேன் என்று மு.க.ஸ்டாலின் கூறியதை வரவேற்காமல், எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்,
படித்தவர்,மருத்துவர் என்பதால் வன்னியர் சங்கத்திற்கு தலைவராக ராமதாசை எனது தந்தை வீரபாண்டி ஆறுமுகம், வாழப்பாடியார் போன்றவர்கள் கொண்டு வந்தார்கள்.
எனது தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட ராமதாஸும் அன்புமணியும் வரவில்லை, அப்படி இருக்கும் பட்சத்தில் எனது தந்தையின் மரணத்தில் ஆதாயம் தேட பார்க்கிறார். தனது கட்சிக்காரர்களை வைத்து அவதூறாக பேட்டி கொடுக்க வைக்கிறார்,அதிமுக கூட்டணியில் உள்ள ராமதாஸ் ஏன் வன்னியர்களுக்கு உள்ள இட ஒதுக்கீடு கேட்கவில்லை.
காடுவெட்டி குரு மரணத்திற்கும் இடஒதுக்கீடு கேட்டு உயிரிழந்தவர்களின் மரணத்திற்கும் ராமதாஸ் தான் காரணம்.
இது குறித்து நீதி விசாரணை வேண்டும் என்று நான் கேட்கிறேன்,
ஸ்டாலினுக்கும் எனக்கும் உள்ள உறவில் விரிசலை ஏற்படுத்த பாமகவினர் செயல்படுகின்றனர்.தேவைப்பட்டால் இவர்கள் மீது வழக்கு தொடர்வது பற்றி தலைமையிடம் பேசி முடிவெடுக்கப்படும்,
உள்ளாட்சி தேர்தல் வர இருப்பதால் அதிமுகவுடன் அதிக சீட்டுகளை பெற இது போல் செயல்படுவதாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் சேலம் பாமகவினர் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார்.