மாணவர்களுக்கு இன்பச்செய்தி! நீட் தேர்வு தற்காலிகமாக ரத்து!!
நமது தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு பல எதிர்ப்புகள் வருடம் வருடம் நடந்து வருகிறது.முதல்வர் முதல் முறையாக ஆட்சியில் அமர்ந்த பிறகு மோடியை நேரில் சந்திக்க சென்றார்.அப்போது அவரிடம் கொடுத்த மனுவில் நீட் தேர்வை ரத்து செய்யுமாறு கேட்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.அதற்கான பதில்கள் ஏதும் இன்றளவும் வரவில்லை.மக்களும் நீட் தேர்வு நடத்துவது குறித்து பல கேள்விகள் எழுப்பி வந்தனர்.இந்த நீட் தேர்வுகள் நடத்தப்பட்டால் மீண்டும் கொரோனா தொற்றானது மாணவர்களுக்கு பரவும் என்பதால் நீட் தேர்வு நடத்த வேண்டாம் என பல தரப்பினரும் கூறி வந்தனர்.
அவ்வாறு கூறி வந்த நிலையில் இளங்கலை நீட் தேர்வு ஆகஸ்ட் 1 ஆம் தேதி என அறிவிப்பு வெளிவந்தது.நீட் தேர்வின் ஆரம்பிப்பதற்கு முன்னே 60 நாட்கள் இடைவெளி காணப்படும்.அந்த இடைவெளியானது தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வு மையங்களை அமைக்கவும் மற்றும் தேர்வு அறைகளை ஏற்படுத்தவும் அந்த கால அவகாசத்தை பயன்படுத்திக்கொள்வர்.
ஆனால் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதால் சிறிது மாதம் நீட் தேர்வை தள்ளி வைக்குமாறு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.அவர்களின் கோரிக்கைக்கு இனங்க தற்போது நீட் தேர்வுக்கான தேதி தள்ளி வைக்கப்படும் என தேசிய தேர்வு கழக அதிகாரி கூறியுள்ளார்.மேலும் அவர் கூறியதாவது,நீட் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்காக மாணவர்கள் பலர் எதிர் பார்த்து வருகின்றனர்.ஆனால் தற்போது தேர்வு நடத்தபடுவது ஓர் பக்கம் இருந்தாலும் மாணவர்களின் நலனையும் எதிர் பார்க்க வேண்டியுள்ளது.அதனால் நீட் தேர்வு செப்டம்பர் மாதம் தள்ளி வைக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறினார்.மேலும், கல்வித்துறை மந்திரியாக தர்மேந்திர பிரதானும், சுகாதாரத்துறை மந்திரியாக மன்சூக் மான்ட வியாவும் தற்போது பொறுப்பேற்றுள்ளனர்.
அதனால் அவர்களுடன் கலந்துரையாடி தான் நீட் தேர்விற்கான தகவல்கள் கூற முடியும் என்றும் தெரிவித்தார்.சென்ற வருடம் செப்டம்பர் மாதம் நீட் தேர்வு நடத்தப்பட்டது.அதன் முடிவுகள் ஓர் மாதத்திற்குள்ளே வெளியிடப்பட்டது.அது போல தேர்வு தற்போது நடத்தப்பட்டு ஓர் மாதங்களிலே முடிவுகள் வெளி வந்துவிடும் எனவும் கூறியுள்ளார்.தற்போது தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிரதமரை காண இன்று டெல்லி சென்றுள்ளார்.ஆளுநரும் முதல்வரை போல பிரதமரிடம் நீட் தேர்வை ரத்து செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.