மாஸ்க் அணியாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம்! அரசு எடுத்த திடீர் முடிவால் ஷாக்!

0
132

இமாச்சல பிரதேசத்தில் புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியதால், ஒரு மாதத்திற்குள் சுமார் ஏழு லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து சேர்ந்துள்ளனர். சிம்லா மற்றும் மணாலி மலைவாச தலங்களில் சுற்றுலா பயணிகள் விதி முறையை பின்பற்றாமல், மாஸ்க் அணியாமல் சுதந்திரமாக சுற்றி திரிகின்றனர்.

இதனால் கோபமடைந்த மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் இமாச்சல பிரதேசத்தை மிகவும் கண்டித்தது. இதன் காரணமாக இமாச்சல பிரதேச அரசு முக கவசம் அணியாமல் சுற்றித்திரியும் சுற்றுலாப்பயணிகளை ஒடுக்க கூறியது.

குல்லு எஸ்.பி குருதேவ் ஷர்மா இதனை குறித்து கூறுகையில், மணாலியில் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டது. மேலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அவதாரம் என்றும் அதனைக் கட்டவில்லை எனில் எட்டு நாட்கள் சிறையில் அடைக்கபடலாம் எனவும் கூறியிருந்தார்.

மேலும் முதல்வர் ஜெயராம் தாகூர் கடந்த 7 நாட்களில் 300 தகவல்களை பதிவு செய்து உள்ளோம் என்றும் 3 லட்சம் ரூபாய் அபராதம் வசூலித்துள்ளோம் என்றும் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் மாநிலத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்த காரணத்தால் அனைவரும் முக கவசம் அணியும் படி கேட்டுக் கொள்கிறோம்.

நாங்கள் சுற்றுலாப்பயணிகளை கண்டிப்பாக வரவேற்கிறோம். ஆனால் கோவிட் விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். மாஸ்க் அணிய வேண்டும் எனவும் எஸ்.பி.ஐ கண்டிப்பாக பின்பற்றும்படி ஹோட்டல்களுக்கு நாங்கள் அறிவித்து உள்ளோம் என்று கூறியுள்ளார்.

Previous articleஇனி பெட்ரோல் விலையை கண்டு அஞ்சத் தேவையில்லை!!
Next article2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அனைத்து சலுகைகளும் நிறுத்தம்! அரசு அதிரடி அறிவிப்பு!