மக்களே பக்ரீத் பண்டிகை கொண்டாட தயாராகுங்கள்!! ஹாஜி சலாஹுத்தீன் முஹம்மத் அய்யூப் அறிவிப்பு!!

0
157
People get ready to celebrate Bakreed !! Haji Salahuddin Muhammad Ayub Announcement !!
People get ready to celebrate Bakreed !! Haji Salahuddin Muhammad Ayub Announcement !!

மக்களே பக்ரீத் பண்டிகை கொண்டாட தயாராகுங்கள்!! ஹாஜி சலாஹுத்தீன் முஹம்மத் அய்யூப் அறிவிப்பு!!

பக்ரீத் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால்கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்தப் பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் இசுலாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் இது கொண்டாடப்படுகின்றது.

வசதியுள்ள முஸ்லிம்கள்,  ஹஜ்  செய்வது என்பது, அவர்களது அடிப்படைக் கடமைகளில் ஐந்தாவது கடமையாகும். ஹஜ் செய்வது என்பது, புனிதப் பயணமாக மெக்கா செல்வதாகும். இப்புனிதப் பயணக் கிரியைகள் அல்லது கடமைகளில் கடைசியானது இறைவனுக்காகப் பலியிடுதலாகும். இது ஹஜ் மாதம் பத்தாம் நாள் நடைபெறும். இந்தப் பெருநாள் தொழுகை நடைபெற்ற பின் ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலியிட்டுக் கொடுக்கப்படுகிறது. பெரும்பாலும் உலகம் முழுவதும் இந்தப் பண்டிகை, தியாகப் பெருநாள் என பொருள்படும் அரபிய பதமான ஈத் அல்-அழ்ஹா  என்றே அழைக்கப்பட்டாலும், தமிழ் நாட்டில் ஆட்டைப் பலியிடுவதை அடிப்படையாக கொண்டு பக்ரீத் என்ற உருது பத்தில் அழைக்கப்படுகிறது.

மேலும் தமிழகத்தில் இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகை எப்போது நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி சலாஹுத்தீன் முஹம்மத் அய்யூப் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கூறியுள்ளார். வரும் ஜூலை 21 ஆம் தேதி இந்த வருடம் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Previous articleகொட்டிதீர்த்த கனமழை..அபாய அளவைத் தாண்டி கரைபுரளும் வெள்ளம்!! அச்சத்தில் உறைந்த மக்கள்!!
Next articleபாஜக பொதுச்செயலாளர் மீது பாலியல் புகார்! அதிர்ச்சியில் கட்சி தலைமை!