கொட்டிதீர்த்த கனமழை..அபாய அளவைத் தாண்டி கரைபுரளும் வெள்ளம்!! அச்சத்தில் உறைந்த மக்கள்!!

0
84

சீன நாட்டில் கொட்டிதீர்த்த மிக கன மழையால் அந்த நாட்டில் தென்மேற்கு மாநிலங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மிதக்கின்றன. மேலும், சில நாட்களாக பெய்து வரும் மழையால் தாங்சுவான், தோன்சுவான், சிச்சுவான் போன்ற மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்கள் அனைத்தும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.

எழுபத்து ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளமானது தனி தீவு போன்று மாற்றி இருக்கிறது. இதன் காரணத்தால் மக்கள் மிக அச்சத்தில் உறைந்துள்ளனர். அதை தொடர்ந்து யாங்ஷீ, பாகே, ஜியாலிங் உள்ளிட்ட நதிகளில் வெள்ளம், அபாய அளவினைத் தாண்டி கரைபுரண்டு ஓடுகிறது.

இதைப்பற்றி பாதிக்கப்பட்ட கிராமவாசி டியூ ஜியங் கூறியதாவது, இங்கு பல நாட்களாக பெய்து வந்த மழை நின்றுவிட்டது. ஆனால், வெள்ளம் மட்டும் நொடிக்கு நொடி அதிகரித்து கொண்டே வருகிறது.

மேலும், சாலைகளில் தேங்கி உள்ள மழை நீரினை அகற்றும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்த மழையால் தங்களது வாழ்வாதாரம் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். அபாய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200க்கு மேற்பட்டோர் மீட்கப்பட்டு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தற்போது சிச்சுவான் பகுதிகளில் மழை குறைந்த போதும் வெள்ளத்தின் தாக்கமானது அதிகரித்து வருகின்றது. நகரங்களின் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்து இருப்பதால் வாகனங்கள் படகுகளை போன்று நீந்தி செல்கின்றன. இதற்கு இடையே மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை அந்த மாநில அரசு போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது.

author avatar
Jayachithra