கொரோனா தடுப்பூசிக்குப் பிறகும் பாசிடிவ் ரிசல்ட்!
கொரோனா தொற்றின் எதிரான எந்த தடுப்பூசிப் போட்டுக்கொண்டாலும் இரண்டாவது டோஸ் போட்டப் பிறகுதான் அந்த தடுப்பூசியின் முழு பாதுகாப்பு பலன்களும் நமக்கு கிடைக்க தொடங்குகிறது. அதுபோல தடுப்பூசியால் மக்களுக்கு மொத்தம் 3 பாதுகாப்பு நன்மைகள் கிடைக்கிறது.
அதாவது நோய்த் தொற்றிலிருந்தும் நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிர் இழப்புகளிலிருந்தும் நோய்த் தொற்றுத் தீவிரத்திலிருந்தும் மக்களை பாதுகாக்கிறது.இந்தியாவில் கிடைக்கும் தடுப்பூசிகளும் சரி, வெளிநாடுகளில் கிடைக்கும் mRNA வகைத் தடுப்பூசிகளும் சரி கொரோனா நோய்த் தொற்றின் தீவிரத்திலிருந்து மக்களை 100% சதவிகித அளவுக்கு தடுக்கும்,ஆனால்!
கொரோனா தொற்றே ஏற்படாமல் 100% சதவிகிதம் தடுக்காது.கொரோனாத் தொற்று 60 முதல் 70 சதவிகிதம் தடுப்பூசி மட்டுமே உதவும் .ஆனால் இரண்டாவது டோஸ் போட்ட பிறகும் கொரோனா தொற்று மக்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.தொற்று பாதித்தால் ஸ்வாப் டெஸ்டில் பாசிடிவ் ரிசல்ட் காட்ட வாய்ப்புள்ளது.அப்படி கொரோனா தொற்று பாசிடிவ் என வந்தால் வழக்கமாக பெறக் கூடிய சிகிச்சியைப் பெறவேண்டும் என்பதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுவரை மருத்துவ ஆய்வுகளின் படி தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டால் ஏறக்குறைய 100 சதவிகிதம் பேருக்கு அறிகுறிகளற்ற நோய்த் தொற்றுப் போல் தான் வந்து விலகி இருக்கிறதே தவிர பெருமளவில் மக்களுக்கு தீவிர பாதிப்புகளை ஏதும் ஏற்படுத்தவில்லை.என்பதை சென்னையைச் சேர்ந்த சிறப்புப் பெற்றத் தொற்று நோய்ச் சிகிச்சை மருத்துவர் பூங்குழலி கூறியிருக்கிறார்.