மத்திய அரசுக்கு முதலமைச்சர் எழுதிய முக்கிய கடிதம்! செவிசாய்க்குமா மத்திய அரசு?

0
67

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய கடிதம் ஒன்றை எழுதி இருக்கின்றார் அதாவது முதுகெலும்பு, தசை செயல் இழப்பு சிகிச்சைக்கான உயிர் காக்கும் மருந்துகளை இறக்குமதி செய்யும் சமயத்தில் வரிவிலக்கு கொடுக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கின்றார்.

தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு எழுதி இருக்கின்ற அந்த கடிதத்தில் உயிர்காக்கும் மருந்துகளை இறக்குமதி செய்யும் சமயத்தில் அறிவியலுக்கு கொடுக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கான உயிர் காக்கும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு சுங்கவரி மற்றும் ஜிஎஸ்டி போன்ற இதர வரிகளுக்கு விலக்கு கொடுக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் தெரிவித்து இருக்கின்றார்.

தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டது முதல் மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கையே கடைபிடித்து வருகின்றார். இதன் காரணமாக, பிரதமரும் மத்திய அமைச்சர்களும் தமிழக அரசின் மீதும், ஸ்டாலின் மீதும் கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள் என்பது பலரும் அறிந்ததுதான்.

அதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது. தமிழக அரசு மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திரும்பத் திரும்ப அழைத்துக் கொண்டே இருப்பதுதான் என்று சொல்லப்படுகிறது. இந்த விவகாரத்தில் பல மத்திய அமைச்சர்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்து இருந்தும் தமிழக அரசு அதை காதில் போட்டுக் கொள்வதாக தெரியவில்லை. இதனால் மத்திய அமைச்சர்களும் பிரதமர் அவர்களும் தமிழக அரசின் மீதும் ஸ்டாலின் மீதும் கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள்.

இதன் காரணமாக, தமிழக அரசுக்கு கிடைக்க வேண்டிய மக்கள் நலத் திட்டங்கள் பல பறி போய் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு ஸ்டாலின் வைக்க கூடிய எந்த ஒரு கோரிக்கையையும் மத்திய அரசு பரிசீலனை கூட செய்வதில்லை என்றும் சொல்லப்படுகிறது. அதேசமயம் அதிமுக ஆட்சியில் இருந்த சமயத்தில் அப்போதைய அதிமுக அரசு எந்த கோரிக்கையை முன்வைத்தாலும் உடனடியாக அதனை நிறைவேற்றி தந்து கொண்டிருந்தது மத்திய அரசு.

ஆனால் தற்சமயம் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டது முதல் அந்த நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது. மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசுக்கு போதுமான உதவிகள் எதுவும் கிடைப்பதில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. அதோடு மத்திய அரசுக்கு தமிழக அரசும் எந்தவிதமான ஒத்துழைப்பும் கொடுக்காததால் மத்திய அரசு கடும் கோபத்தில் இருக்கிறது.

இப்படியான சூழ்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு தமிழக அரசின் சார்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இவ்வாறு ஒரு கடிதத்தை எழுதி இருக்கின்றார். அந்தக் கடிதத்திற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமா என்பது சந்தேகம்தான் என்று சொல்கிறார்கள்.