ட்ரெண்டிங்கில் எடப்பாடியார்! அதிர்ச்சியில் ஆளும் தரப்பு!

0
140

சென்ற 2016ஆம் வருடம் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக மறுபடியும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜெயலலிதா அடுத்த ஒரு வருட காலத்திற்குள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

இதனைத் தொடர்ந்து தற்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓபிஎஸ் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அதன் பின்னர் அந்தக் கட்சிக்குள் நிலவிய குழப்பங்கள் காரணமாக, அவர் பதவி விலக நேரிட்டது. அவரை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவியேற்றார். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் முதலமைச்சராக பொறுப்பு வகித்த எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் பல நலத் திட்டங்களையும், சட்டங்களையும் வடிவமைத்து இருக்கிறார் என்பது தவிர்க்க முடியாத உண்மை.

அதில் ஒரு சில முக்கிய அம்சங்களை இங்கே பார்க்கலாம் அதாவது பிளாஸ்டிக் ஒழிப்பிற்கு எதிராக இவர் கொண்டு வந்த சட்டம் பொது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதே போல தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பின்தங்கிய இருக்கின்ற வன்னியர்களுக்கு 10 புள்ளி 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி சட்டம் ஒன்றை இயற்றினார். இந்த கோரிக்கையானது வன்னியர்களின் மிக நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது. அதனை அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றிக் கொடுத்திருக்கின்றார்.

அதேபோல தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு சட்டம் இயற்றினார். இந்த சட்டத்தை இயற்ற வேண்டும் என்று விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் அதற்காக போராடியும் வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல மருத்துவ படிப்பில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்து தமிழக மக்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம் பிடித்தார் எடப்பாடி பழனிச்சாமி.

இப்படியான சூழ்நிலையில் சமூக வலைத்தளமான டுவிட்டர் பக்கத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிடும் விதத்தில் எடப்பாடியார் என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த ஹேஷ்டேக் அனேக பதிவுகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்தது தொடர்பாக பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

7.5 சதவீத உள்ஒதுக்கீடு என்ற வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை மேற்கொண்டு அதன் மூலமாக 400க்கும் அதிகமான தமிழக அரசு பள்ளி மாணவ, மாணவிகளை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பியது மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் செய்த மிகப்பெரிய சாதனை என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டிலிருந்து பொது மக்களோ அல்லது எந்த ஒரு அமைப்பு கோரிக்கை எதுவும் வைக்காத நேரத்திலும் கூட யாரும் எதிர்பாராத விதத்தில் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் நோக்கத்தில் 7.5 சதவீத இட ஒதிக்கீடு வழங்கி எல்லோரையும் மருத்துவ படிப்பிற்கு அனுப்பி அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Previous articleதமிழக அரசிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த பாரதிய ஜனதா கட்சி! அதிர்ச்சியில் திமுக!
Next articleபிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய மிக அவசர கடிதம்! என்ன செய்யப்போகிறார் பிரதமர்!