தலை கால் புரியாமல் வானில் பறக்கும் ரசிகர்கள்!! அஜித் ரசிகர்களுக்கு அடித்த ஜாக்பாட்!!

0
109
The next update of the movie Valimai is coming !! Do you know when the teaser will be released?
The next update of the movie Valimai is coming !! Do you know when the teaser will be released?

தலை கால் புரியாமல் வானில் பறக்கும் ரசிகர்கள்!! அஜித் ரசிகர்களுக்கு அடித்த ஜாக்பாட்!!

தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி உலக அளவில் எதிர்பார்க்கப்பட்ட படம் வலிமை. இந்த படத்தை இயக்குனர் வினோத் இயக்குகிறார் மற்றும் போனிகபூர் தயாரிக்கின்றார். மேலும் இந்த படம் நடிகர் தல அஜித் குமார் நடிப்பில் உருவாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி 2 வருடங்களுக்கும் மேலாக ஆகிவிட்டது. பொதுவாக ஒரு படத்தை துவங்கி ஒரு வருடம் அல்லது அதற்கு குறைவான மாதங்களில் முடித்து படத்தை வெளியிடுவது வழக்கம். ஆனால் சில காரணங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு முடிய தாமதம் ஆகிவிட்டது.

மேலும் கடந்த இரண்டு வருடங்களாகவே இந்த படத்தை பற்றிய எந்த ஒரு தகவலையும் வெளியிட வில்லை. அதனால் எதிர்பார்ப்பில் உச்சத்தை தல ரசிகர்கள் இந்த படத்தின் அப்டேட் குறித்து அரசியல் பிரமுகர்கள் முதல் விளையாட்டு வீரர்கள் வரை அனைவரிடமும் கேட்டு தொல்லை செய்தனர். மேலும் இந்த படத்தில் அப்டேட் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அஜித் அவர்களின் பிறந்தநாளன்று வெளியிடுவதாக படக்குழு முடிவு செய்தது. ஆனால் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதி தீவிரமாக பரவி வந்ததன் காரணமாக அந்தப் படத்தின் அப்டேட் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதனால் சோகம் அடைந்தனர் ரசிகர்கள் மீண்டும் அப்டேட் குறித்த தகவலை தெரிந்து கொள்ள ஆர்வமுடன் இருந்தனர். தல ரசிகர்கள் மட்டுமின்றி இந்த அப்டேட்க்காக தளபதி ரசிகர்கள் மற்றும் அனைத்து நடிகர் ரசிகர்களும் மிகவும் ஆர்வமுடன் காத்திருந்தனர்.

இந்த நிலையில் ஜூலை 11ம் தேதி இப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து கூறிய படியே இந்த முறை ரசிகர்களை ஏமாற்றாமல் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டது. முன்னர் கூறிய படியே தல ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற ரசிகர்களும் இந்த படத்தின் போஸ்டரை பார்க்க ஆர்வமாக இருந்தனர். மேலும் இந்த படத்தின் முதல்பார்வை போஸ்டர் மிகவும் பிரம்மாண்டமாகவும் ரசிகர்கள் இவ்வளவு வருடம் காத்திருந்ததில் எவ்வித தவறும் இல்லை என்று சொல்லும்படி வேற லெவல் லுக்கில் இருந்தது. மேலும் இந்தப் படம் இவரின் விசுவாசம் படம் படைத்த சாதனை 14 மணிநேரத்தில் முறியடித்தது. வலிமை படத்தின் முதல் பார்வை போஸ்டருக்கு யூடியூப்பில் 10 மில்லியன் லைக்குகளை பெற்று பெரும் சாதனையை படைத்துள்ளது. இந்த தருணத்தை கொண்டாடும் வகையிலும் ரசிகர்களுக்கு பேரின்பம் தரும் வகையிலும் வலிமை படத்திலிருந்து மற்றொரு போஸ்டரையும் படைக்க் குழு வெளியிட்டுள்ளது.  இதை பார்த்து தல ரசிகர்கள் தலை கால் புரியாமல் மகிழ்ச்சியில் வானில் பரந்து கொண்டு உள்ளனர்.