சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்த சோகம்! வருத்தத்தில் பக்தர்கள்!

0
94
Tragedy at Chidambaram Natarajar Temple Devotees in grief!
Tragedy at Chidambaram Natarajar Temple Devotees in grief!

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்த சோகம்! வருத்தத்தில் பக்தர்கள்!

கொரோனா  தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை அதிக அளவு பாதித்து வருகிறது.முதல் அலையை காட்டிலும் இரண்டாவது அலை அதிக அளவு மக்களை தாக்கியது.அதேபோல் இரண்டாவது அலைல் தான் அதிகப்படியான உயிர் சேதங்களும் நடந்தது.மேலும் கொரோனா தொற்று  அதிக அளவு பரவாமல் இருக்க அரசாங்கம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது.அந்தவகையில் பிரசித்திப்பெற்ற கோவில்களின் விழாக்களை கொண்டாடுவதற்கு தடை உத்தரவு போட்டது. அந்த வகையில் தற்போது சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி திருமஞ்சன விழா கொண்டாடப்படும்.

அதற்கான கொடியேற்றமும் கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது.தற்போது அதிக அளவு பரவலாக தொற்று  பரவி வருவதால் பொதுமக்கள் இன்றி கோவிலின் உள் பிரகாரத்தில்  திருவிழா நடைபெற்று வருகிறது. வருடம் வருடம் இத்திருவிழாவை காண ஆயிரக்கணக்கில் பக்தர்கள் சிதம்பரத்தை நோக்கி வருவர்.இந்த வருடம் கோவில் வளாகமே வெறிச்சோடி இருப்பது வருத்தத்திற்குரியதாக உள்ளது. அதேபோல் சாமிக்கு சிறப்பு பூஜைகள் முடிந்த பிறகு குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுகின்றனர்.அதனை அடுத்து சிகர திருவிழாவான தேரோட்டம் இன்று நடைபெற உள்ளது.

நாளை ஆனி திருமஞ்சன விழா நடைபெற உள்ளது. இந்த விழாவை காண பலர் அனுமதி கேட்டு அரசாங்கத்திடம் வலியுறுத்தினர்.ஆனால் தற்போது கொரோனா வின் இரண்டாவது அலையை  காட்டிலும் மூன்றாவது அலை உருவாகி வருவதால்,  தேரோட்டத்தை கோவிலுக்கு வெளியே  நடத்தவும் மற்றும் ஆனி திருமஞ்சன விழாவை நடத்தவும் ம் தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை.அதற்கு பதிலாக கோவிலின் உள் பகுதியிலேயே தேரோட்டம் நடத்தலாம் என்றும் அதே போல் ஆனி திருமஞ்சன விழாவையும் கோவிலின் உள்புறம் நடத்துவதற்கு அனுமதி தந்துள்ளனர்.

வழக்கமாக தேரோட்டத்தின்போது நடராஜருக்கு கோவிலுக்கு உள்ளே நடைபெறும் பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக அரசு கூறிய படி இன்று அதிகாலை 5 மணிக்கு மேல் சுவாமி நடராஜரும் சிவகாம சுந்தரியும் சித்சபையில் இருந்து புறப்பட்டு உள் பிரகாரத்தை வலம் வந்தனர்.அதனையடுத்து அவர்கள் ஆயிரங்கால் மண்டபத்தில் காட்சி கொடுக்க உள்ளனர்.இவர்களது காட்சியை காண்பதற்கு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பொதுமக்கள் தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.நாளை திருமஞ்சன விழாவில் உள்ள சுவாமியை தரிசிக்க மதியம் 2 மணி அளவில் பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என கூறியுள்ளனர்.

இதற்கடுத்து சுவாமி நடராஜரும் சிவகாம சுந்தரியும் நடனமாடியபடி கோவிலுக்கு செல்வார்கள் அதன் பிறகு மாலை 3 மணிக்கு மேல் இரவு 10 மணி வரை பொதுமக்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி தந்துள்ளனர். கொரோனா நோய் தொற்று காரணமாக ஆனித்திருமஞ்சன விழா இரண்டாவது ஆண்டாக பொதுமக்கள் இன்றி நடப்பது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.