பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு பெட்ரோலை கிப்ட் கொடுக்கும் காங்கிரஸ் எம்பி!
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் இரு மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த நிலையில் திமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. திமுக ஆட்சியில் அமர்ந்த பிறகு பல நலத் திட்டங்களுக்கு கையெழுத்திட்டார். அதனையடுத்து விலைவாசியையும் வானம் தொடும் அளவிற்கு ஏற்றி விட்டனர். பால் விலை குறைப்பதாக கூறி தற்போது சிலிண்டரின் விலை ஏறி உள்ளது. அதேபோல் பேருந்துகளுக்கு இலவசமாக பயணம் என்று கூறிவிட்டு தற்போது பெட்ரோலின் விலை ஏறிவிட்டது.
சக நாடுகளில் கரோனா தொற்று பாதிப்பினால் ஊரடங்கு அமர்த்தப்பட்டது.அந்த ஊரடங்கு நாட்களில் அதிக அளவு வண்டிகள் ஏதும் பயன்படுத்தாததால் பெட்ரோலின் விலை அடி மட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.ஆனால் நமது நாட்டில் மட்டும் ஊரடங்கை மீறியும் பெட்ரோலின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது.லாரி உரிமையாளர் சங்கம் இதற்காக பல போராட்டங்களை நடத்தியும் எந்தவித பயனையும் அளிக்கவில்லை.தற்போதைய விலைவாசியை கண்டித்து பொதுமக்களும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஒரு கட்சியின் தலைவர்களுக்கு பிறந்தநாள் என்றால் இனிப்பு வழங்கியும் மற்றும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடுவர்.மேலும் ஒரு படியாக பொதுமக்களுக்கு உணவு வழங்குவது அல்லது பிள்ளைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்குவது என்பதை செய்வர்.ஆனால் தற்போதைய காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசு ,அவர் பிறந்தநாளையொட்டி பொது மக்களுக்கு கிப்ட் வழங்கியது அனைவரையும் வியப்படைய வைக்கிறது.பெட்ரோலின் விலை நாளுக்கு நாள் கிடுகிடுவென உயர்ந்த நிலையில் அவர் பிறந்த நாளையொட்டி சென்னை அரும்பாக்கத்தில் மத்திய சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கினார்.
இந்த பெட்ரோல் வழங்கும் விழா அம்மாவட்டத் தலைவர் வீரபாண்டியன் ஏற்பாட்டில் நடைபெற்றது.இந்த பிறந்தநாள் விழாவில் காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் டாக்டர் விஷ்ணுபிரசாத் கலந்து கொண்டார்.கலந்துக்கொண்டு அவரே பொதுமக்களுக்கு தடுப்பூசிபோட்டார்.மேலும் சாலையில் சென்றவர்களை கூப்பிட்டு அவரது பிறந்த நாள் பரிசாக பெட்ரோல் வழங்கி மகிழ்வித்தார்.பெட்ரோல் விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய அரசை கண்டித்து இது நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.