ஆளுநரின் உண்ணாவிரத போராட்டம்! இதனை கண்டிக்க தானா!

0
118
Governor's hunger strike! Don't condemn this!
Governor's hunger strike! Don't condemn this!

ஆளுநரின் உண்ணாவிரத போராட்டம்! இதனை கண்டிக்க தானா!

கரோனா என்ற கொடிய தொற்றை விட பெரிய தொற்று தான் வரதட்சணை.இந்த வரதட்சணை கொடுமையால் அனைத்து மாநிலங்களிலும் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்த வண்ணமாக தான் உள்ளது.தற்போது சமீபகாலமாக கேரளாவில் மட்டும் அதிக அளவு வரதட்சணை கொடுமை நடக்கிறது.அதனால் பல உயிரிழப்புகளும் நடந்து வருகிறது.வரதட்சணை கொடுமைக்கு தள்ளப் படுபவர்களும் துணிச்சலுடன் முன்வந்து வெளியே சொல்ல அஞ்சுகின்றனர்.

அவ்வாறு அஞ்சும் சூழல் மாறுமாயின் வரதட்சணை கொடுமை நடப்பது நிறுத்தப்படும்.வரதட்சணை கொடுமைக்கு ஆளாக படுபவர்கள் கடைசி நிமிடங்களில் வீடியோ மூலமாகவோ அல்லது கடிதம் மூலமாகவும் தங்களின் சிரமங்களை கூறிவிட்டு தற்கொலை செய்து விடுகின்றனர்.ஆனால் இதை அவர்கள் முன்கூட்டியே சொல்ல நேர்ந்தால் தவறு செய்பவர்களுக்கு தக்க தண்டனை வாங்கிக் கொடுக்க முடியும்.தற்பொழுது கேரளாவில் வரதட்சணை கொடுமை தலைவிரித்து ஆடி வருவதால் பல எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர்.

அதனால் பெண் வீட்டார் வரதட்சனை வழங்குவதும் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் அதனை பெற்றுக் கொள்வதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்று உண்ணாவிரத போராட்டம் கேரளாவில் நடந்து வருகிறது.இது மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டும் வகையில் உள்ளது என கூறுகின்றனர்.இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கேரளாவின் காந்தி அமைப்பும் கலந்துகொள்ள உள்ளது.

மேலும் இந்த போராட்டத்தில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கலந்து கொண்டுள்ளார்.தற்போது அவர் ஆளுநர் மாளிகையில் எந்த உணவும் எடுத்துக் கொள்ளாமல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.மாலை 6 மணி வரை இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என கூறுகின்றனர்.மேலும் கேரள ஆளுநர் 4:30  மணி அளவில் காந்தி பவனில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது.இந்த டெக்னாலஜி காலத்தில் அடுப்பூட்டும் பெண்களாக இருந்து விடாமல் துனுச்சளுடன் நடந்துக்கொள்ள வேண்டும்.

Previous articleஹெட்செட் பயன்படுத்துவதால் மூளை புற்றுநோய்!! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட நிபுணர்கள்!!
Next articleமனைவி தற்கொலை! மது போதை தலைக்கேறியக் கணவன்!