மனைவி தற்கொலை! மது போதை தலைக்கேறியக் கணவன்!

0
147
Wife commits suicide! Husband addicted to alcohol!
Wife commits suicide! Husband addicted to alcohol!

மனைவி தற்கொலை! மது போதை தலைக்கேறியக் கணவன்!

கரூர் மாவட்டம் மாயனூர் காசா காலணியைச் சேர்ந்தவர் மாலதி, பெரம்பலூர் மாவட்டம் பாடலூரைச் சேர்ந்தவர் தனசேகர். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மாலதியும் தனசேகரனும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இப்பொழுது இந்த தம்பதிகளுக்கு நான்கு வயதில் ஆசித் என்ற மகன் உள்ளான், தனசேகரன் வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒருபோதை ஒழிப்பு மையத்தில் மேனேஜராக பணியாற்றுகிறார்.

மாலதி மாயனூரில் தனது தாய் தமிழரசி வீட்டில் தன் மகனுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் தனசேகரன் தனது மனைவியையும், மகனையும் பார்ப்பதற்காக மாயனூர் வந்துள்ளார். அந்த சமயத்தில் அதிகமாக மது குடித்த மயக்கத்தோடு மாலதியின் அம்மா வீட்டிற்கு வந்துள்ளார்.இதனால் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அதிக கோபமடைந்த மாலதி தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் சுடிதார் துணியில் தூக்குப்போட்டு தற்கொலைச் செய்து கொண்டார். இதைப் பார்த்த மாலதியின் மகன் ஆசித் தனது தாய் மாலதி தற்கொலை செய்ய முயல்வதைக் கண்டு கதறி அழுதுள்ளார். இதனால் முழுபோதையில் இருந்த தனசேகரன் தனது மகன் ஆசித் அழுவதைப் பார்த்து அழாதே என்று அதட்டி இருக்கிறார்.

ஆசித் தாய் தனது மாலதி தூக்கில் தொங்குவதைக் கைகாட்ட அதைக்கண்ட தனசேகரன் போதையோடு தள்ளாடிக் கொண்டு போய் தனது மனைவி தூக்கில் தொங்கிய சுடிதார் துணியை அறுத்து விட்டு மனைவியின் உடலை தரையில் போட்டு விட்டு மீண்டும் குடிபோதையில் தள்ளாடிக் கொண்டுத் தூங்கியுள்ளார். பின்னர் அவரது மகன் ஆசித் அருகில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார் உடனே பொதுமக்கள் அங்கே குவிந்தனர்.

மாலதி ‘இறந்து’ கீழே கிடக்கிறார் அவரது அருகிலேயே தனசேகரன் முழு போதையில் தூங்கிக்கொண்டு இருப்பதை பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனால் உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் மாயனூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தற்கொலை செய்துகொண்டு இறந்துபோன மாலதியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முழு போதையில் இருந்ததால் மனைவி தன் கண்முன் தற்கொலை செய்து கொள்வதை கூட தடுக்க முடியாமல் போன இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.