ராகி உணவை சாப்பிட்டதன் காரணமாக ஏற்பட்ட விளைவு! 3 பேர் உயிரிழந்த பரிதாபம்!
சித்ரதுர்கா தாலுகாவில் லம்பானிஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் திப்பாநாயக் 45 வயதான இவரது மனைவி சுதா பாய் இவருக்கு 40 வயது, இந்த தம்பதியின் மகன் ராகுல் 19 வயது, மகள் ரக்க்ஷிதா 17, ரம்யா 16, மற்றும் திப்பநாயகத்தின் தாய் குந்தி பாய் 85 வயது, இவர்கள் 6 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்கள் ராகி உருண்டை தயாரித்து சாப்பிட்டனர்.
ரக்சிதா தவிர மற்ற 5 பேரும் அந்த உணவை சாப்பிட்டனர். அவர் மட்டும் இரவில் சாப்பிடவில்லை. இரவு உணவு முடிந்ததும் அவர்கள் அனைவரும் தூங்க சென்றனர். இந்த நிலையில் உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் அந்த ஐந்து பேருக்கும் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரக்க்ஷிதா அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.
மேலும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவர்கள் 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சித்ரதுர்கா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சுதா பாயும், குந்தி பாயும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை அடுத்து திப்பாநாயக், ராகுல், ரம்யா ஆகிய 3 பேரும் சித்ரதுர்கா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக தாவணகெரே அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே திப்ப நாயக் பரிதாபமாக உயிர் இழந்தார். இதனை அடுத்து ராகுலும், ரம்யாவும் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இது குறித்து தகவல் அறிந்த பரமசாகரா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் போலீசார் பலியான 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து மேலும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். ராகி உருண்டை சாப்பிட்டுவிட்டு படுத்தால் எப்படி இப்படி நடந்தது, மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 3 பேர் உயிர் இழந்ததால் அந்த உணவை ஆய்வுக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளனர்.
ரக்க்ஷிதா மட்டும் உயிர் தப்பியது அவர்களுக்கு தெரிய வந்துள்ளது. எனவே அந்த உணவில் விஷம் கலக்கப்பட்டு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி அறிந்ததும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதிகா லம்பானிஹட்டி கிராமத்தில் உள்ள அவர்களது வீட்டுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு ராதிகா கூறுகையில், ராகி உருண்டையை சாப்பிட திப்பாநாயக் அவரது மனைவி சுதா மற்றும் அவரின் தாய் குந்திபாய் ஆகிய 3 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் ராகுல் மற்றும் ரம்யா சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்றொரு மகள் ரக்க்ஷிதாவுக்கு மட்டும் எதுவும் ஆகவில்லை.
குடும்பத்தினர் சாப்பிட்ட ராகி உருண்டையை போலீசார் சேகரித்து ஆய்வுக்காக அனுப்பி உள்ளனர். அந்த உருண்டை விஷம் கலக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். மேலும் இதுதொடர்பாக அவரது இரண்டாவது மகள் இடமும் விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறினார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ராகி உணவை சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.