திருவள்ளூர் மாவட்டத்தில், கும்மிடிப்பூண்டி வட்டம், கரும்புகுப்பம் என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காளம்மன் கோவில் குளத்தில் மூழ்கி 5 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் மற்றும் நிவாரண உதவிகளை அளித்து உள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், கரும்புகுப்பம் என்ற கிராமத்தில் உள்ள ஸ்ரீ அங்காளம்மன் கோவில் குளத்தில் நேற்று 10:45 அளவில் அந்த பகுதியை சேர்ந்த ஐந்து நபர்கள் துணி துவைத்துக் கொண்டிருந்த போது, செல்வி நர்மதா பதினொன்று என்ற வயது சிறுமி ஆழமான பகுதிக்கு சென்ற காரணத்தால் அந்தச் சிறுமியை காப்பாற்றுவதற்காக, சுமதி, ஜோதி, மற்றும் செல்வி அஸ்விதா, செல்வி ஜீவிதா போன்ற பெண்கள் ஒருவர் பின் ஒருவராக ஆழமான பகுதிக்குச் சென்றனர்.
அந்த ஐந்து நபர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும், இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
தமிழகத்தில் முன்பு கொரோனா தோற்று ஒரு பக்கம் உயிர்களை எடுக்கிறது, மற்ற பக்கத்தில் உயிர்சேதம் ஆனது அடிக்கடி நிகழ்ந்து கொண்டே உள்ளது.
ஆழமான குளத்திற்கு, குழந்தைகளை அழைத்துச் செல்லக் கூடாது என்று பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அவர்கள் ஏதேனும் ஒரு காரணத்திற்காக அங்கு சென்று பின்பு உயிர் சேதம் நிகழுகிறது. எனவே,ஆழமான பகுதிகள் இருக்கும் இடத்தில் குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.