திமுக பிரமுகருக்கு ஒபிஎஸ் வைத்த ஆப்பு!! தனிப்படை அமைத்து தேடுகிறது திருச்சி போலீஸ்!!
முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் சென்ற 15ம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் , திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே முத்தபுடையான்பட்டியில் மணல் கடத்துவதாக காவல் துறைக்கு தகவல் வந்ததாகவும், இதை தொடர்ந்து, தனிப்படை அப்பகுதிக்கு விரைந்து சென்று சோதனை நடத்தியதாகவும், சோதனையின் போது மணல் அள்ளிக் கொண்டிருந்த ஒரு ஜேசிபி மற்றும் இரண்டு லாரிகளை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், அவற்றின் ஓட்டுநர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மணப்பாறை கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஆரோக்கியசாமிக்கு சொந்தமானவை என தெரியவந்துள்ளது என்று தெரிவித்திருந்தார். மேலும் ஆரோக்கிய சாமி கொடுத்த அழுத்தினால், மூன்று ஓட்டுநர்களையும் காவல் துறையினர் விடுதலை செய்துள்ளனர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட மூன்று வாகனங்களை எடுத்துச் சென்று விட்டனர்.
இதை அடுத்து, அந்த மூன்று ஓட்டுநர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களையும் மீண்டும் காவல் துறையிடம் ஒப்படைப்பது தொடர்பாக, திமுக ஒன்றிய பொறுப்பாளர் ஆரோக்கியசாமி வீட்டுக்குச் சென்ற மணப்பாறை காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் தொடர்ந்து நான்கு மணி நேரம் பேசியுள்ளார் எனவும், ஸ்ரீரங்கல் தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டி தான் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், பேச்சுவார்த்தையின் முடிவில் ஆரோக்கிய சாமி இரண்டு பழைய வாகனங்களையும் ஒப்படைக்க சம்மதித்ததாகவும், ஓட்டுநர்களை இறுதி வரை ஒப்படைக்கவில்லை என்றும் செய்திகள் வந்துள்ளன என்று ஓ பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் கூறியிருந்தார். இந்த வழக்கில் திருச்சி டிஐஜி ராதிகா நேரடியாக இறங்கி விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும், மணப்பாறை இன்ஸ்பெக்டர் அன்பழகனை பணியில் அலட்சியமாக இருந்ததாக பணியிடை நீக்கம் செய்தும் டிஐஜி ராதிகா உத்தரவிட்டார்.
மணப்பாறை மனல் கடத்தல் தொடர்பான போலீசாரின் விசாரணையின், ஆரோக்கிய சாமி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதைதொடர்ந்து திமுக பிரமுகர் ஆரோக்கியசாமியை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி திமுக தலைமை வியாழன் அன்று அறிவிப்பு வெளியிட்டது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, காவல் நிலையத்தில் இருந்து எடுத்துச் சென்றது சமந்தமாக திருச்சி டிஐஜி ராதிகா உத்தரவின் அடிப்படையில் ஏடிஎஸ்பி பால்வண்ணநாதன், டிஎஸ்பி வீரமணி ஆகியோர் வியாழன் இரவு மணப்பாறை காவல் நிலையத்துக்குச் சென்று விசாரித்தார்கள்.
மேலும் இந்த வழக்கில் கைதான ஓட்டுநர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் அனைவரும், திமுக பிரமுகர் ஆரோக்கியசாமி கூறியதால் தான் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்தார்கள். இதனால் திமுக பிரமுகர் ஆரோக்கியசாமியை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.