Kanavu Palangal in Tamil : கனவுக்கு பின்னால் இப்படி ஒரு ரகசியம் உள்ளதா?!! அறிவுப்பூர்வமான தகவல்!!

0
142

கனவு என்பது நினைவுகளின் ஒரு கற்பனை வடிவமாகும். மேலும், மனதின் அடித்தளத்தில் புதையுண்டு இருக்கும் நினைவுகள் ஒரு வெளிப்பாடாக இது கூறப்படுகிறது. ஆனால் கனவுகளை பற்றிய நம் முன்னோர்கள் ஆராய்ந்து பல்வேறு குறிப்புகளை எழுதி வைத்து சென்றிருக்கின்றனர்.

அந்த வகையில், கோவில் மற்றும் கடவுள் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கோவில்களை கனவில் கண்டால் அந்த இறைவனின் அருளால் விரைவில் நீங்கள் நினைத்த காரியம் ஈடேறும் என்று அர்த்தம். மேலும், கோவிலுக்குள் செல்ல முடியாமல் கூட்ட நெரிசலில் மாற்றிக் கொள்வது போன்று கனவு கண்டால் ஏதாவது பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ள போகிறீர்கள் என அர்த்தம் ஆகும். ஆலயத்தில் நாம் மட்டும் தனியாக இருப்பது போன்று கனவு வந்தால் மிகவும் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உண்டு.

மேலும், கோவிலின் வாசலை திறந்து உள்ளே செல்வது போல கனவு கண்டால் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு பெரும் வெற்றி அடைய போகிறோம் என அர்த்தமாகும். கடவுளுக்கு மாலை செலுத்துவது போல கனவு வந்தால் நல்ல வளர்ச்சி அடைய போகிறோம் என்று அர்த்தம்.

மேலும், கோவில் கோபுரம் கனவில் வந்தால் வாழ்க்கையில் மிக உயர போகிறோம் என அர்த்தம் ஆகும். பிரசாதத்தை பெற்றுக் கொள்வது போல கனவு வந்தால் சிலருக்கு மனக்கவலைகள் ஏற்படப் போவது என அர்த்தம். கடவுளிடம் பேசுவது போல கனவு காண்பது மிகவும் நல்லது, இது விரைவில் நன்மைபெற போவதின் அறிகுறிகளாகும்.

இந்த கனவுகளின் மூலமாக நம் முன்னோர்கள் ஆராய்ந்து இந்த குறிப்புகளை எழுதி விட்டுச் சென்றிருக்கின்றனர். இதனை தெரிந்து கொள்வது மிகவும் நன்மை பயக்கும் இதன் மூலமாக பல அறிவுப்பூர்வமான தகவல்களையும் அறிந்து கொள்ளலாம்