அணிலுக்காக தன் பைக்கையே விட்டுக்கொடுத்த மருத்துவர்!! மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்!!

0
242

மதுரையில் தன் இரு சக்கர மோட்டார் வாகனத்தில் பிரசவமான அணில் குட்டிகளுக்காக மாற்று வாகனத்தை உபயோகித்து வந்தார் கால்நடை மருத்துவர். மேலும், இதனை பொதுமக்கள் மிகவும் பாராட்டி வருகின்றனர்.

மதுரை ஆனையூர் கூடல்நகர் பகுதியைச் சேர்ந்த மெரில்ராஜ் என்பவர் ஒரு அரசு கால்நடை மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்து இருப்பது வழக்கம். அப்போது மோட்டார் சைக்கிளின் பின் பகுதி இருக்கைகள் அடிக்கடி வந்து வந்து சென்று உள்ளது.

இதனை கவனித்த மெரில்ராஜ், அணில் ஒன்று கூடு கட்டி அதில் மூன்று குட்டிகளுடன் வசித்து வந்தது தெரியவந்தது. இதனால் பெரும் மகிழ்ச்சி அடைந்த அவர் கடந்த ஒரு மாத காலமாக அந்த வாகனத்தை உபயோகப்படுத்தாமல், மாற்று வாகனத்தை பயன்படுத்திக் கொண்டு தனது அன்றாட பணிகளை செய்து வருகிறார்.

இதனைக் குறித்து கூறுகையில், ‘மனிதர்களிடம் மனிதாபிமானம் காட்டுவது போல் விலங்குகள் மற்றும் பறவைகள் இடமும் மனிதாபிமானம் காட்டவேண்டும். இந்த அணில் குட்டிகளை மோட்டார் சைக்கிளில் இருந்து வெளியே விட்டு அவைகள் அந்த இடத்திலேயே தனது இருப்பிடத்தை அமைத்து உள்ளன.

அதனால் அதனை அப்படியே விட்டுவிட்டு அணில்களுக்கு உணவு கொடுத்து வளர்க்க தொடங்கி விட்டோம்’. என்று அவர் கூறினார். இதனை பொதுமக்கள், ‘முல்லைக்கு தேர் கொடுத்தார் பாரி அதேபோல அணிலுக்கு பைக் கொடுத்தார் மெரில்ராஜ்’ என்று கூறி வருகின்றனர்.

இவரைப்போல நல்லுள்ளங்கள் படைத்த மனிதர்கள் இருந்தாலே போதும். மனிதர்களுக்கு மட்டுமே அனைத்தும் சொந்தம் என்று நினைக்கும் இந்த கூட்டத்திற்குள் இவர் விலங்குகள் மற்றும் பறவைகள் முக்கியம் என்று நினைக்கும், இவர் போல நல்ல உள்ளங்கள் என்றும் வாழ வேண்டும் இந்த புவியில் என்று கூறுகின்றனர்.

Previous articleபாலியல் வழக்குகளில் குற்றம் புரிந்தவரை எளிதில் அறியும் சோதனை! – நீதிபதி!
Next articleகுழந்தைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும்?!! பெற்றோர்களுக்கு முக்கிய தகவல்!!