மேட்டூர் அணையில் திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளது!!
தென்மேற்குப் பருவமழையின் காரணமாக கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் இடி மின்னலுடன் கூடியக் கனமழை தொடர்ந்துப் பெய்து வருகிறது.இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் என்ற அணைகளில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகின்றன.இந்த இரண்டு அணிகளிலும் இருந்து அதிக அளவுத் தண்ணீர் தமிழகத்தில் உள்ள காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளது மெய்யினருவி மற்றும் ஐந்தருவியில் சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் தாறுமாறாகக் கொட்டி வருகிறது.இந்த நிலையில் இன்று காலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 72.61 அடியில் இருந்து 73.29 அடியாக உயர்ந்திருக்கிறது.மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 12,804 கன அடியிலிருந்து 16,301 கன அடியாக அதிகரித்திருக்கிறது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு ஒரு வினாடிக்கு 12000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது அணையின் நீர் இருப்பு 35.59 எம் சியாக இருக்கின்றது கடந்த 2 நாட்களில் மேட்டூர் அணையில் நீர்மட்டம் 1.42 அடியாக உயர்ந்திருக்கிறது,என்று தகவல் பரவி வருகிறது.