சேலத்தில் நடத்துனர் செய்த செயல்! பயணிகளின் அதிர்ச்சி!

0
73
The action taken by the conductor in Salem! Passenger shock!
The action taken by the conductor in Salem! Passenger shock!

சேலத்தில் நடத்துனர் செய்த செயல்! பயணிகளின் அதிர்ச்சி!

பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய தமிழக அரசு வசதி செய்துள்ள கொடுத்துள்ள நிலையில் அதை தவறாக சில நடத்துனர்கள் பயன்படுத்து கிறார்கள். அது தற்போது அம்பலமாகியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும் நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படும் என்பது தேர்தல் வாக்குறுதியாக இருந்தது.

அதை தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறப்பித்த உத்தரவின் பேரில் இந்த வாக்குறுதி நடைமுறைக்கு வருவதாக அறிவித்தார். அதன்படி நகரப்பகுதிகளில் இயக்கப்படும் டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், திருநங்கைகளும் இதே போன்ற வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

எனவே அவர்களுக்கும் முதல்வர் செவிசாய்த்தார். மேலும் மாற்றுத்திறனாளிகள் கூட இதே போன்ற கோரிக்கை விடுத்தனர். அதற்கும் மாண்புமிகு முதல்வர் செவி சாய்த்த நிலையில் அவர்களுடன் ஒத்தாசைக்கு வரும் நபர்களுக்கு இலவச பயணம் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி நான்கு வகையான டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டன.

மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி உதவியாளர் என நான்கு வகையான டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டிருந்தது. அந்த பிரிவை சேர்ந்தவர்களுக்கு அதற்குரிய டிக்கெட் வழங்கப்பட்டு வந்த நிலையில், சில நடத்துனர்கள் தன் சுயலாபத்திற்காக சில திருட்டு வேலை செய்ய ஆரம்பித்திருக்கின்றனர்.

இப்படித்தான் சேலம் ஜங்ஷனில் இருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு செல்வதற்காக டவுன் பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது பாதிவழியில் டிக்கெட் பரிசோதகர்கள் சோதனை செய்த போது, அவர்கள் அதிர்ந்து போனார்கள். ஏனெனில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இருபத்தி ஒன்று ஆண் தொழிலாளர்கள் கைகளில், பெண்களுக்கு வழங்கப்படும் இலவச டிக்கெட் இருப்பதை பார்த்து டிக்கெட் பரிசோதகர் சொல்ல முடியாத அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் அந்த இளைஞர்களை கேட்ட போது, இந்த டிக்கெட்டுகளை தங்களுக்கு கொடுத்துவிட்டு ஒவ்வொருவருக்கும் தலா 6 ரூபாய் வசூல் செய்ததாக அந்த பீகார் இளைஞர்கள் தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இலவச டிக்கெட் என்பது அவர்களுக்கு தெரியாமல் இருந்திருக்கிறது. இதை நடத்துனர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இந்த மோசடியில் ஈடுபட்டு இருக்கிறார்.

இது தொடர்பாக மண்டல போக்குவரத்து மேலாளர் லட்சுமணனுக்கு புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட நடத்துனர் நவீன்குமார் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வருகிறது. 126 ரூபாய்க்கு ஆசைப்பட்டு மோசடி செய்த நடத்துனர் பணியிலிருந்து நீக்கப்பட்ட தோடு துறை ரீதியான விசாரணை எதிர்கொள்ள வேண்டியது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் நடக்கும் பல நலத் திட்டங்களில், அரசு மக்களுக்காக செய்யும் பல நல்ல விஷயங்களிலும் இப்படித்தான் சிலர் நடுவில் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். சில விஷயங்களை வெளியில் தெரிகின்றது. பல விஷயங்கள் வெளியில் தெரியாமலே போய்விடுகின்றன.