தூய்மைப் பணியாளர்கள் தாம்பூலத் தட்டு வைத்து வேலைக்கு அழைப்பு! பட்டதாரிகளின் பகட்டு!
கோவை மாநகரத்தில் 100 வார்டுகள் உள்ளது இங்கு 2520 நிரந்தர துப்பரவு பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.கடந்த ஆண்டு இதில் காலயிடமாக இருந்த 325 பணியிடங்களும் இப்பொழுது முழுமையாக நிரப்பப்பட்டது.இந்த பணிகளில் படித்த பட்டதாரிகள் மென் பொருள் கட்டுமான நிறுவனங்களில் பணியாற்றுவதற்கு பலரும் போட்டி போட்டுக்கொண்டு வந்தனர்.
இந்திய அளவில் இது மிகவும் பெருமையான விஷயம் என்று மக்களிடையே சிறப்பாகப் பேசப்பட்டது,ஆனால் அவ்வாறு பணிக்கு சேர்ந்த பட்டதாரிகள் ஜாதி ஆதிக்கம் மற்றும் பணப் பலத்தைப் பயன்படுத்தித் தூய்மைப் பணிகளை செய்வதில்லை என்று அவர்களுடன் வேலைபார்க்கும் சகத் தூய்மைப் பணியாளர்கள் குற்றம் சாட்டி உள்ளார்கள்.
இந்த நிலையில் சமூக நீதி கட்சியில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பட்டதாரிகளை தூய்மைப் பணியை செய்யாமல் இருப்பவர்களுக்கு நூதனமான அழைப்பு விடுத்தார்கள், அதன்படி வெற்றிலை பாக்கு மற்றும் தாமலத்துடன் மத்திய மண்டல அரசு ஆணையர்களைச் சந்தித்து அவர்களின் உதவியுடன் தூய்மை பணியாளர்களை பணிக்கு அனுப்புமாறு கோரிக்கை கேட்டுக்கொண்டார்கள்.