இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட முக்கிய பிரச்சனை!இரு அவைகளும் ஒத்திவைப்பு!

0
66

இந்தியாவில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசில் பணிபுரியும் அமைச்சர்கள், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர்கள் நீதிபதிகள் இன்று பல தரப்பினரும் இஸ்ரேலிய ஸ்பைவேர் பெகாசஸ் மூலமாக அரசாங்கத்தால் உளவு பார்க்கப்பட்டதாக தி வயர் உள்ளிட்ட சர்வதேச இதழ்களில் செய்திகள் வெளியாகத் தொடங்கியது.இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி, பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட பலர் உளவு பார்க்கப்பட்டதாக பட்டியல்கள் வெளியாகின. இந்த நிலையில், இந்த விவகாரம் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்து இருக்கிறது.

மழைக்கால கூட்டத் தொடரின் இரண்டாவது நாளான இன்றைய தினம் காலை 11 மணியளவில் அவை நடவடிக்கைகள் ஆரம்பமானது. சில நிமிடங்களில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. மக்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.இன்று காலை நாடாளுமன்றத்திற்கு செல்வதற்கு முன்னர் எதிர் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பெகாசஸ் திட்டம் தொடர்பாக விவாதம் செய்வதற்காக ஒன்றுகூடி ஆலோசனை செய்தார்கள். அதேபோல பாரதிய ஜனதா கட்சியும் தன்னுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை நடத்தியது.

எதிர்க்கட்சிகள் இன்றையதினம் பெகாசஸ் விவகாரத்தை எழுப்ப வாய்ப்பிருக்கிறது என்பதால் அது தொடர்பாக மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் அறிக்கை வெளியிட இருக்கிறார் என்றும் அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இன்று காலை 11 மணி அளவில் மக்களவை மற்றும் மாநிலங்களவை கூடிய உடனேயே எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உளவு பார்த்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை உறுப்பினர்கள் இதன் காரணமாக, இரண்டு அவைகளிலும் சலசலப்பு உண்டானது. தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் இந்த விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று ஒத்திவைத்து கோரிக்கைகளை சபாநாயகரிடம் தெரிவித்தார்கள். இதனடிப்படையில் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து முழக்கமிட்டார்கள்.

இது தொடர்பாக அந்தத் துறையின் அமைச்சர் அறிக்கை விடுவதற்கு முன்னால் இதில் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் மிக தீவிரமாக இருந்த காரணமாக அமளி உண்டானது இதனால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன.