பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் தகுதியற்ற 42.16 லட்சம் விவசாயிகளின் மூலமாக பெறப்பட்ட 2992 கோடி ரூபாயை அரசு மீட்டெடுக்கும் என மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்து உள்ளார். மேலும், பிரதமர் கிசான் திட்டத்திற்கு கிழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000 ரூபாய் வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் தகுதியற்ற விவசாயிகளும் பணம் பெறுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. மேலும், இந்த நிலையில் பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி இல்லாமல் பணம் பெற்று வரும் 42 லட்சத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் கண்டறியப்பட்டு மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மக்களவையில் தெரிவித்தார். மேலும் நாடு முழுவதும் இதுவரை தகுதியற்ற 42 லட்சத்து 16 ஆயிரத்து 643 விவசாயிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் மொத்தமாக 29,92,75,16,000 கோடி டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது. அதை அரசாங்கத்தால் மீட்டெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். பிரதமர் கிசானின் கீழ் அசாமில் அதிக தகுதியற்ற விவசாயிகள் உள்ளனர் என்று அமைச்சர் கூறினார். மேலும், அசாமில் 8,35,268 விவசாயிகள் உள்ளனர். அதனை அடுத்து தமிழ்நாட்டில் 7,22,271 மற்றும் பஞ்சாப், மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடக,ராஜஸ்தான் போன்ற இடங்களில் அதிக தகுதியற்ற விவசாயிகள் இருப்பதாக அவர் கூறினார்.
அதனை தொடர்ந்து சிக்கிமில் தகுதியற்ற விவசாயிகள் மிகக் குறைவான எண்ணிக்கையில் இருக்கின்றன என்று தெரிவித்தார். இதன்பின் விரைந்து மேற்கு வங்கத்தில் 19, சண்டிகரில் 123 மற்றும் அருணாசலப் பிரதேசத்தில் ௧௩௬, லடாக்கில் 23,லட்சத்தீவில் 5 விவசாயிகள் உள்ளனர் என்று அவர் தெரிவித்தார். இந்த அனைத்து தகுதியற்ற விவசாயிகளிடம் இருந்தும் பணம் வசூலிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.